விதியை மதியால் வெல்லு
விதியை மதியால் வெல்லு சோதிடம் பார்த்து விதியை நினைத்து, சோம்பல் கொண்டு காலம் ஓட்டாதே // எண்ணங்களை நல் விதத்தில் ஓடவிட்டு, எண்ணங்களை நிறைவேற்ற முயற்சி எடு // அடுத்தவர் மேல் பழி போட்டு தப்பித்து, அழிவில் சிக்கிக் கொண்டு திணறாதே // எடுக்கும் செயல்களை துரிதமாக செய்து, எல்லாம் நன்மைக்கே என்று செயல்படு // சாஸ்திரம் பார்த்து அனைத்தும் தள்ளிப்போட்டு, சாவது மேல் என்று நினைக்காதே/ மதியால் அனைவரும் சிந்தித்து செயல்பட்டு, மதியால் விதியை உதறிவிட்டு வாழ்வோம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்