Posts

Showing posts from July, 2024
 தடுமாற்றம் தடம் மாறுதல் மனம் சிதற வைக்கும் // தவறு செய்தாலும் சிதறல் வரும் // தன் குழப்பமும் நடுக்கம் தரும் // தடுமாற்றம் துன்ப கதவுகளைத் திறக்கும் // வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

மௌனம்

 மௌனம் மனம் அமைதியாக சீராக இருக்கவும், மனப்போராட்டம் ஒடுங்கி செயல்படவும், மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், மனதில் நிம்மதி தங்கி மகிழவும், மங்கலான மனது வெளிச்சமாக மாறவும், மனது சம்மதத்தின் அறிகுறியாக மெளனமாகும். வி. எஸ்.ரோமா கோயம்புத்தூர்

காமராசர்

 காமராசர் காமராசர் ஐயா கல்விக் கண் திறந்து வைத்தவர் // காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து, கல்வியை இலவசமாகவும் கொண்டு வந்தார்// காமராசர் எளிமையான வாழ்வு வாழ்ந்தார். காமராசர் ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டு, கர்மவீரர் காமராசர் என அனைவராலும் பாராட்டப்பட்டார். காமராசரின் 121 வது பிறந்தநாள் கல்வித் திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்வே // வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்.

கலைந்து போன கனவுகள்

 கலைந்து போன கனவுகள் இளம் வயதில் சிரித்து விளையாடியது, இறை வழிபாடு தாத்தா சொல்லியது, இனியவை பேசப் பாட்டி சொல்லியது, இன்னல்களை எதிர்க்க ஆசிரியை சொல்லியது, இன்பம் துன்பம் இரவு பகல், இப்படிப் பெரியம்மா தைரியம் சொல்லியது, இலகுவாக எதையும் சமாளிக்கப் பெற்றோர்கள் இன்றும் சொல்லி வரும் தன்னம்பிக்கை, இப்படி கடந்து போன வாழ்வானது, கலைந்து போன கனவுகளாகப் போனது. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

என் பேனா

 என் பேனா என் பேனா  எழுத்துக்கு ஊன்றுகோல் // எழுத்தாணி என் மனதில் வேரூன்றி, என் கவலையை நீக்கி  போட்டு, என் மனதை இலகுவாக வைத்தது // என்றும் அழியா நினைவுகளை கொடுத்து, என்னை உலகுக்கு உதாரணம் காட்டி, என்னை மனதார மக்கள் பாராட்டி, என் பேனாவால் உதிர்ந்த முத்துகள் என்னோடு  முத்து மாலையாக இருந்து, எனக்கு புகழ் சேர்த்து கொடுத்து, என் வாழ்நாளை சாதனையாக மாற்றி என் பேனா என்னோடு புதைந்தது. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்