Posts

Showing posts from May, 2024

நீயின்றி நானில்லை

 நீயின்றி நானில்லை அம்மாவுக்கு நான் குழந்தை பெருமையே // அழகு தமிழை அழகாக கற்றுக் கொடுத்து, அம்மா என்ற முதல் வார்த்தையை, அன்போடு பேச வைத்து மகிழ்ந்து, அப்பாவை கூட மறந்து விட்டு, அசதியாக இருந்ததையும் மறந்து விட்டு, அரவணைத்து எனக்கு உணவு ஊட்டி, அசல் அப்பா போல் வளர்த்து விட்டு, அளவில்லா மகிழ்ச்சியில் அப்பாவையும் இணைத்து, அகிலம் புகழ உயர்த்தி விட்டாயே. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

நந்தவனம்

 நந்தவனம் பூக்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க தேவை // பூந்தோட்டம் பார்க்க இயற்கை அழகு// பூக்களின் அழகு பெண்களுக்கு மெருகூட்டும் // பூக்கள் பூரிப்பு இரண்டும் ரசனை // பூக்களின் மென்மையை பெண்களுக்கு சமமாகவும் // பூக்களை கண் கொள்ளா காட்சியாக மகிழ்வர். வி. எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நிலவு தூங்கும் நேரம்

 நிலவு தூங்கும் நேரம் நிலவில் உன் முகத்தை கண்டேன்// நின்ற நேரம் அளவே இல்லை // நிலவில் உன் முகம் பிரதிபலித்தது // நின்று கொண்டே உன்னிடம் பேசினேன்// நிலவே பதில் எனக்கு மகிழ்வூட்டியது // நிலாவைப் பார்த்து குழந்தைகள் சாப்பிட நிலவே நானும் ரசித்து  சாப்பிட்டேன்// நிலவின் வரவுக்குள் அனைத்தும் முடித்துவிட்டு, நிலவு ஒளியால் உள்ளம் பிரகாசித்தது ..  வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

இலக்கு

 இலக்கு படிக்கும் பருவத்தில் விளையாட்டில் இலக்கு // கல்லூரி வயதில் காதலில் இலக்கு // படித்து முடித்ததும் தொழிலில் இலக்கு // தொழில் சிறக்க போட்டியில் இலக்கு // பணத்தை சேமித்து வைப்பதில் இலக்கு // குடும்ப வாழ்வில் குதூகலமாக இலக்கு // குழந்தைகளை முன்னேற வைக்க இலக்கு // குடும்ப உறவுகளை இணைப்பதில் இலக்கு // ஒற்றுமையை ஓங்கிப் பிடிப்பதில் இலக்கு / கொள்ளை நோயில் தப்பிக்க இலக்கு // நம் உழைப்பு நம் நாட்டுக்கே // நல்ல செயல்களை செய்வதில் இலக்கு // சமூகம் சீர்கேடு இல்லாத இலக்கு // ஓய்வு வயதில் ஓய்வெடுக்க இலக்கு // தான் பெற்றது மற்றவருக்கும் இலக்கு // மகிழ்ந்து மகிழ்வித்து வாழ இலக்கு. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

எதிர்நீச்சல்

 எதிர்நீச்சல் எதிலும் துணிந்து செயல்பட்டு, எதிலும் பின் வாங்காது சென்று, வெற்றி பெறுவது வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

தாய்

 தாய் தாயின் அன்பில் நனைந்து மகிழ்ந்து, தரணி போற்றும் புகழ் பெற்று, தாய் மகள் உறவை மேம்படுத்த, தாயின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தேன். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

பக்குவம்

 பக்குவம் பக்குவம் எதிலும் உறுதியாக தேவை // பலகாரம் முதல் மனிதன் வரை || பண்பட்ட நிதானம் இருந்தால் சமாளித்து, பலரையும் மகிழ்ச்சி பொங்க செய்யலாம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

உழைப்பே உயர்வு

 உழைப்பே உயர்வு உழைப்பே உயர்வு உழைப்பு மனிதனை மேல் நோக்கும் // உழைப்பு சலிப்பு இல்லாது  இருந்து, உறக்கத்தை உதறிவிட்டு மகிழ்வோடு செய்து, உண்மையாக உழைத்து சிறக்க வாழ்ந்து, உறவுகளுக்கு உதவியாக இருந்து கொண்டு, உழைப்பு மகிழ்ச்சியாகி   வாழ்பவனே மாமனிதன். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்