Posts

Showing posts from November, 2022

வலி தந்த நினைவுகள்

 வலி தந்த நினைவுகள் வயதான பெண்மணியிடம் கேட்ட மன வேதனைகள்// சாலை ஓரத்தில் அனாதை பிச்சைக்காரன் சடலத்தைக் கண்ட மன வேதனை// குடிகாரக் கணவனிடம் சிக்கித் தவித்த பெண்மணியைக் கண்டதால் மன வேதனை// அநீதிக்கு நீதி தந்ததைக் கேட்டு மனவேதனை// பெற்றோர்களை ஒதுக்கிய குழந்தைகளைப் பார்த்த மன வேதனை// வழிப்பறியை, கண்டும் காணாதது போவோரைப் பற்றிய மன வேதனை// சொத்து இருந்தால் சொந்தம் என்பதை நினைத்து மனவேதனை// பணம் இருந்தால், பகைவனும் நண்பனாவான் என்பது நினைந்து மனவேதனை// உறவுக்கு மதிப்பு குறைவது பற்றிய மனவேதனை// பணம் பாதாளம் வரைக்கும் பாயும் உண்மை கண்ட மன வேதனை// சுதந்திரம் கிடைத்தும் கிடைக்காதது கண்டு மனவேதனை// இயற்கை வளங்களை  அழிப்பது கண்டு மன வேதனை// மற்றவர்களின் ஆனந்தத்தை ஒழிக்க நினைப்பது கண்டு மனவேதனை// எதிலும் எங்கும் அடக்கு முறை ஒழியாதது கண்டு மனவேதனை// துணிந்தால் துன்பத்தை ஓட்டலாம் துணியாது கலங்கி நிற்பது கண்டு மன வேதனை// மன வேதனைகளை மங்காது காப்பது வேதனையிலும், வேதனைதானே?|...... வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உதிரம் கொடுப்போம் 🌷🌷🌷🌷உயிரைக் காப்போம்-

 🌷🌷🌷உதிரம் கொடுப்போம் 🌷🌷🌷🌷உயிரைக் காப்போம்- 🌷உதிரம் நிறம் மாற்றம் இல்லை// 🌷உறவே இல்லை என்றாலும்,  🌷உதிரம் தந்து  🌷உயிரைக் காப்போம்// 🌷உதிரம் கொடை தருவது 🌷இறைவனுக்குச் சமமே// 🌷உயிரைக் காப்பாற்றி மகிழ்ச்சியோடு வாழ்வோம்// 🌷உயிரைக் காப்பாற்றும் குருதி தானமே மிகச் சிறந்தது// 🌷உயிரைக் காப்பாற்றும் குருதிக்கு ஜாதி மதம் இல்லையே// 🌷உயிர் காப்பற்றும் குருதிக்கு ஈடு இணை இல்லையே // 🌷உயிரைத் தந்து, 🌷உயிர் வாழ்வோம்// 🌷உலக மக்களே உணர்ந்து செயல்பட்டால் 🌷உலகப் போர் 🌷உயிர்ப்பலி  🌷உலா வராது அல்லவா? 🌷உயிர்காப்போம் 🌷உயர்ந்து நிற்போம்// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்