Posts

Showing posts from August, 2023

சாலை

 சாலை சாலையில் வாகனங்கள் ஓடவில்லை// இருபுறமும்  பசுமையில்லா மரங்கள்// மனித நடமாட்டம் இல்லாத பயணம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

குறிக்கோள்

 குறிக்கோள் குறிக்கோள் குறிக்கோள் இல்லா வாழ்க்கை உடல் சோர்வே // எதிலும் எங்கும் . மனம் பக்குவம் வேண்டுமே// நல் எண்ணங்களை விதைத்து அறுவடை செய்து, அவற்றை இலட்சியப் பாதையில் பயணிக்க செய்வோம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

விளையாட்டு

விளையாட்டு விளையாடு உடல் நலம் நலமாகும் என்று சொல்லவே// விளையாடு விளையாடு என்ற சொல் பதியவே //  விளையாட்டை ஆரம்பிக்கவே// வினையானது விளையாட்டே // விரும்பி வீசிய பந்து விலகிப் போய் சிறுமியின் தலையில படவே // விம்மி விம்மி சிறுமி அழுகவே // விழுந்து விழுந்து நான் அழவே // விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள் என்று சொல்லவே // விட்டு விடுங்கள் இருவரும் ஆபத்து ஒன்றுமில்லை  என்று சொல்லவே // விட்டபாடில்லை இருவருமே // விளையாட்டு விபரீதம் ஆயிடுச்சு என்று சிலர் சொல்லவே // விளையாடு என்ற சொல் என் மனதை வாட்டிய தே// விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன் அன்றே// விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்வோமே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

முதியோரை மதி

 முதியோரை மதி முதியோர் இன்றி இளையோர் இல்லை// முதியோர் அனுபவச் சொல் மந்திரமே// முதியோர் உணவுப் பழக்கம் உடல் நலமே // முக்கிய விழாக்கள் முதியோர் வழியே // முதியோர் குழந்தைகளுக்கு நல் ஆசிரியரே // முன் காலம் முதியோரால் சொர்க்கமே // முதியோர்கள் ஒற்றுமையின் அடையாளச் சின்னமே // முதிர் வயது அனைவரது ஆறுதலே // முன் காலம் பொற்காலம் என்றால் முதியோரே // முன் கால இறைவழிபாடு நல் ஒழுக்கமே // முதியோர்கள் குடும்ப வழிகாட்டிதலின் முன்னோடிகளே// முதியோரை மதித்து வாழ்ந்தால் முன்னேறலாம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மெளனம்

 மெளனம் மெளனம் இருந்தால் சரீரம்  நன்மையே // மெளனம் மற்றவரை வம்புக்கு இடங்கொடாது// மெளனம் சிந்தித்தலை சீர்படுத்தி உயர்த்தும்// மௌனமே சம்மதம் என்றாகி மகிழ்ச்சி பொங்கும்// மெளனத்தின் திறவுகோல் நம் மனமே// மெளனம் என்றுமே நல்லதே செய்யும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தர்மம்

 தர்மம் தர்மம் செய்தால்  வாழ்வு துளிர்க்கும்// தர்மத்தின் அடையாளம் அகம் செழிக்கும் // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

விடியல்

 விடியல் விடியல் அனைவருக்கும் பொதுவானதே / விடிய வேண்டாம் என்றாலும் விடியும்// விடியல் நல் விடியல் ஆக ஆவலே// விடியலில் முயற்சி இருந்தால் முடிவு நல்லதே // விடியலில் சமூக நலன் கருதுவது அரிதே// விடியலில் நன்மை கண்டவுடன் இதயம் மகிழ்வே // விடியலில் எதிர் நீச்சல் போட்டு சாதிப்பது வேண்டுமே// விடியும் நல்லதே நடக்கும் தன்னம்பிக்கை வேண்டுமே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பறவைகள்

 பறவைகள் பறவைகளிடம் ஒற்றுமையைக் காண்போம்// பறவைகளிடம் பகிர்ந்து உண்பதைக் காண்போம்// பறவைகள் மரங்களை பூச்சி அரிக்காததைக் காண்போம்// பறவைகள் மன்னர்கள் காலத்தில் தூது போவதைக் கண்டோம்// பறவைகளை காதல் காவியத்தில் கண்டோம்// பறவைகளை மனித மிருகங்கள் வேட்டையாடுவதை காண்கின்றோம்// பறவைகளைக் கண்டவுடன் மகிழ்வுடன் நேரத்தை கடக்கின்றோம்// பறவைகளின் எச்சில் மூலம் விதை பூமியில் விதைப்பதைப் பார்க்கின்றோம்// பறவைகள் கூட்டமாகப் பறந்து தொலைதூரம் செல்வதைப் பார்க்கின்றோம்// பறவைகளின் அழகு நம் கற்பனைகளை அதிகரிப்பதை நினைத்து மகிழ்கின்றோம்// பறவைகள் நம்மிடம் பழகுவதை நினைத்து மகிழ்கின்றோம்// பறவைகளை நாம் கூண்டில் அடைக்காது சுதந்திரமாகப் பறக்க விட்டுப் பார்ப்போம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பூலோகம் வானத்தின் எல்லை

  பூலோகம் வானத்தின் எல்லை பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறதே? இரவு பகல் இதனால் தான் ஏற்படுகிறதல்லவா? பூமி மட்டுமா சுற்றுகின்றது.? பூமியில் இருக்கும் நாமும், புவி ஈர்ப்பு விசையால் சுற்றி மகிழ்கிறோமல்லவா? பூமி தனது சுழற்சியை நிறுத்துவதால் சுனாமி ஏற்படுகிறதல்லவா? பூமி நீர், நிலம், காற்று, ஈர்ப்பு விசை, சுழற்சி இவற்றால் நம்மை இயற்கையாக பாதுகாக்கும் // வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

சுதந்திரம்

 சுதந்திரம் சுதந்திரம் என்றவுடன் தியாகிகள் நினைவு // சும்மா இல்லாது வீரமாக பேசி, சுறுசுறுப்பாக பணி செய்து, சுதந்திமாக எங்கும் பேசி, சுதந்திரக் காற்றை சுவாசித்து, சுகமாக வாழ்கின்றோம் இதுவல்லவோ? சுதந்திரம் பெற்றதன் அடையாளம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர் r

சிறகு விரி சிகரம் தொடு

 சிறகு விரி சிகரம் தொடு சிந்தனைகளைத் தூண்டிவிட்டு, சிதறாமல் மெளனமாய்  சிறகை விரித்து பறக்க விட்டு, சிரிக்க, சிந்திக்க ஏணி போல் இருந்து, சிறப்பு கவிஞர் பெயர் வாங்க வைக்கின்ற  சிறகை விரி சிகரம் தொடு உனக்கு சிரிப்பொலி முழங்க வாழ்த்து கூறுவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியே// வாழ்க பல்லாண்டு வாழ்க// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பெண்

 பெண் மெழுகாய் உருகி, மென்மையா பேசி, மெலிந்து போனாலும், மெட்டி ஒலியை, மெதுவாக ஒலிக்கச் செய்து, மெதுவாக நடந்து, மெல்ல மெல்ல குடும்பத்தை உயர்த்தினாய். மெலுகுவர்த்திப் பெண்ணே, மெருகூட்டுகின்றாய் குடும்பத்தை  மெதுவாக நடந்தாலும், மெழுகாய் உருகினாலும், மெழுகுப் பெண்ணே பெருமை உனக்கே.. முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தோல்வியே தோற்றுப்போ

 தோல்வியே தோற்றுப்போ கனவில் தோற்றேன் கலங்கினேன் கடும் முயற்சி எடுத்தேன். கண்டது கனவு என்று நினைத்து, கலகமே வந்தாலும் கலங்காது முயற்சித்து கடும் தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்றாகி, கலகலப்பாக பயணித்து கண்ட  கனவை சரித்திரமாக்கி சரித்திர நாயகனானேன்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

என் ஆசான்

 என் ஆசான் என் பெற்றோர்களே எனக்கு முதல் ஆசான் // என் பள்ளி ஆசிரியை என் கல்விக்கு ஆசான் // என் நட்புகளே என் பாதைக்கு ஆசான் // என் காதலியே வாழ்வுக்கு ஆசான் // என் குழந்தைகளே என் வாழ்வு படிக்கட்டு ஆசான் // என் வயோதிகமே  என் கடைசி கால வாழ்வின் ஆசான். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உயிர் தந்த உறவுகள்

 உயிர் தந்த உறவுகள் உயிர் தந்து, உலகத்தைக் காட்டி உறவுகளை வளர்த்து, உண்மைக்கு ஏதும் செய்து, உனக்கு சுமை தாங்கி என்றாகி, உயிர் உள்ளவரை உள்நலனில் பங்கு கொண்டு, உரிமையோடு உலா வருவோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உயிர் காப்பான் தோழன்

 உயிர் காப்பான் தோழன் உறவுகள் ஒதுக்கினாலும், உன்னதமான தோழன் ஒதுக்க மாட்டான்// உறவுகளில் முதன்மையாக இருந்து, உயிரோடு ஒன்றிப்போய், உயிர் மடியும் வரை உயிர்த் தோழனாக இருப்பான்.// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

எல்லாம் சில காலம் தான்

 எல்லாம் சில காலம் தான் என் மனதை வாட்டும் கவலைகளோ .... என் கடின உழைப்போ.. என் உடலை வாட்டும் நோய்களோ.... என் பொருளாதாரத்தை வாட்டும் பற்றாக்குறையோ.... எதுவானாலும் வாழ்வில் கடப்பது சில காலம் தான்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மனசே மெளனமே

மனசே மெளனமே மகிழ்ச்சி ஆகுமா? மனசே மெளனமா மனதை வாட்டி விடுமா? மனசே என்னை எதில் விடுவாய்? மனசே  சொல்லத் துடிக்கிறாயா? மனசுக்கு மகுடம் சூட்டி வாழவே விருப்பமே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

இளமையின் வலிமை

 இளமையின் வலிமை வரலாறு படைக்க துடிக்கும் வலிமை// வஞ்சனை காணும் வலிமையின் வலிமை// வம்பு இழுத்து பேசும் வலிமை // வறுமையை ஓட்டப் பாடுபடும் வலிமை// வட்டத்துக்குள் ஓடாது நேராகப் பாயும் வலிமை // இளமை என்பது எதையும் யோசிக்காது, இரும்பு இதயம் போல் வாழும் வலிமை// வருவோர் வரட்டும், போவோர் போகட்டும் என்ற வலிமை// வரவு என்ன?. செலவு என்ன என்று யோசிக்காத வலிமை வஞ்சனைகள் பற்றி கண்டுகொள்ளாத வலிமை. வண்டு போல் துளைத்தாலும் காணாத வலிமை / வரலாறு படைத்தாலும் இந்தியன் என்ற வலிமையே ஓங்குக, வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நாமும் நமது சமுதாயமும

 🌷நாமும் நமது சமுதாயமும 🌷நாம் நேரத்தை சுயநலமாக ஒதுக்கி, 🌷நம் உறவுகளை ஒதுக்கி தள்ளி, 🌷நலமா? என்ற கேள்வியோடு விட்டு விட்டு, 🌷நம் சொந்தங்களை அறியாது கடந்துவிட்டு, 🌷நகரத்தில் வசிப்போராகி சுழண்டு விட்டு, 🌷நகரத்தில் செலவு அதிகமாக காட்டிவிட்டு, 🌷நமக்கு மட்டுமே அறிமுகமான உறவு, 🌷நம் குழந்தைகளுக்கு தேவையா? நினைத்து விட்டு, 🌷நகரத்தில் நரகமாக உறவின்றி 🌷தத்தளித்துவிட்டு, 🌷நாமும் நமது சமுதாயமும் வீணாகின்றோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

எதிர் காலம் எங்கே போகின்றது?

 எதிர் காலம் எங்கே போகின்றது? இயற்கையாக பழுக்கும் பழம் எங்கே? இன்னல்களுக்கு தோள் கொடுப்போர் எங்கே? இலை போட்டு வரவேற்பு எங்கே? வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உன்னருகே நானிருந்தால்,

 உன்னருகே நானிருந்தால், உன் மனமோ தைரியம் கொடுத்து, உள்ளங்கையில்  உள்ள சாவியைப் போல் உலகமே என் கையில் போல், உணர்ந்து மகிழ்ச்சி கொண்டு, உச்சிக்குப் போய் விடுவேன், உண்மையான மகிழ்ச்சி வெள்ளப் பெருக்கில்.... வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

முகத்திரை

 முகத்திரை முகத்தை மறைத்துக் கொண்டு விழிக்க,, முகம் காணாது வில்லனிடமிருந்து தப்பித்தாள். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்