முதியோரை மதி
முதியோரை மதி
முதியோர் இன்றி இளையோர் இல்லை//
முதியோர் அனுபவச் சொல் மந்திரமே//
முதியோர் உணவுப் பழக்கம் உடல் நலமே //
முக்கிய விழாக்கள் முதியோர் வழியே //
முதியோர் குழந்தைகளுக்கு நல் ஆசிரியரே //
முன் காலம் முதியோரால் சொர்க்கமே //
முதியோர்கள் ஒற்றுமையின் அடையாளச் சின்னமே //
முதிர் வயது அனைவரது ஆறுதலே //
முன் காலம் பொற்காலம் என்றால் முதியோரே //
முன் கால இறைவழிபாடு நல் ஒழுக்கமே //
முதியோர்கள் குடும்ப வழிகாட்டிதலின் முன்னோடிகளே//
முதியோரை மதித்து வாழ்ந்தால் முன்னேறலாம்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment