Posts

போட்டி

போட்டி வேண்டும் மனித வாழ்வில் 🔥போராட்டம் வேண்டாம் மனித வாழ்வில் 🔥போராட்டம் நல்வழி பாதையில் பயணிக்கலாம் 🔥போராட்டம் கெட்ட வழியில் வேண்டாம் 🔥போட்டி போடுவது யாரோடும் கூடாது. 🔥போட்டி தனிப்பட்ட செயலில் வேண்டும் 🔥போட்டிக்காக மனச் சோர்வு கூடாது 🔥போட்டியில் வெற்றி பெற உழைப்போம் 🔥போட்டியில் வெற்றியானது கொடுக்க வாங்க வேண்டும் வி. எஸ். ரோமா கோயம்புத்தூர்

காதல்

காதல் காதல் என்பது அன்பின் வெளிப்பாடு காதல் இன்றி வாழ்வு ஏது? காதல் ஆண் பெண் மட்டுமல்ல காதல் அனைவருக்கும் சொந்தமான இயல்பு காதல் இன்றி உறவுகள் ஏது? காதல் போனால் சாதல் சரியானது காதல் போனால் மனம் சரியகாது காதல் வாழ்க காதல் வெல்லும் வி. எஸ். ரோமா கோயம்புத்தூர்

தாயான தாய் மொழி

 தாயான தாய் மொழி தாய் முதலில் கற்றுக் கொடுத்த, தாய்மொழி தமிழில் உரையாடுவது பெருமையே // தரணி போற்றும் தமிழ் அழகே // தாய்மொழி தமிழ் பேசுவதற்கு அழகு// தமிழ் பேசுவதற்கு இனிமை நிறைந்தது// தமிழ் மொழி பழமை வாய்ந்தது // தங்கத் தமிழ் உலகம் அறிந்தது // தமிழ் மக்கள் உபசரிப்பு அழகு // தமிழில்   மழலை கொஞ்சும் வார்த்தைகளும், தமிழ் வீர வார்த்தைகளும் உணர்வு மிகுதியே // தமிழ் மொழியில் செதுக்கிய சிற்பங்களும், தமிழர்களின் அறிவை, திறமை வெளிப்படுத்தி, தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை வெளிப்படுத்தும் // தமிழை நாம் தாய்மொழியாகக் கொண்டு, தமிழைப்  பேச மறந்துவிடும் போதும், தமிழைப் பேச தயங்கும் போதும், தமிழன் ஒரு பைத்தியக்காரன் போலத்தான். // தமிழ் மொழி தேனும் பழாச்சுளையும் போல. அனைவருக்கும் இனிய தாய்மொழி தின நல்வாழ்த்துகள் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தீப ஒளியே வருக இருளை நீக்குக

தீப ஒளியே வருக இருளை நீக்குக தீபத் திருநாளே வருக வருக இந்நாளில் புத்தாடை எனக்கு உண்டு // இனிப்பு நிறைய கிடைக்க வாய்ப்புண்டு// இனிய முகத்துடன் அனைவரும் இருப்பதுண்டு// இல்லம் தோறும் மகிழ்ச்சி உண்டு// இல்லம் குதூகலமாக இருக்க இடமுண்டு // இன்று எனக்கு அனைத்தும் உண்டு// இனிப்பு வகைகள் ஏராளம் உண்டு // இனிய பேச்சுகள் ஒலிப்பது உண்டு// இன்று உறவுகள் கூடி உண்பது உண்டு// இன்பமாக ஒருவருக்கொருவர் பேசுவது உண்டு// இதுவல்லவோ பட்டாசு போல் பிரகாசிக்கும். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

என் உலகம் என் பெற்றோர்

 என் உலகம் என் பெற்றோர் என் பெற்றோரே என் கண்கள் // எனக்கு உயிர் கொடுத்தது பெற்றோர்களே// என் மழலைப் பேச்சை கேட்டு, என் நடைப் பயணத்தை வழிகாட்டி  என் குரலை கம்பீரமாக உயர்த்தி என் பயத்தை தெளிவு படுத்தி, என் சந்தேகங்களுக்கு பதில் கொடுத்து, என்னை செல்வ செழிப்பில் வளர்த்து, எனக்கு தேவையானதை தேடிப் பிடித்து, என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க, எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து, என்னை உடலில் வளர வைத்து, என்னை மனதளவில் உயர வளர்த்து, என்னை எழுத்துலகில் புகழ வைத்த, என் உலகம் என் பெற்றோர்களே. முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பொறுமை ஒரு போதும் தோற்பதில்லை.

 பொறுமை ஒரு போதும் தோற்பதில்லை. பொறுமை மனிதனை சிந்திக்க வைக்கும் // பொறுத்தார் ஆளும் திறமை பெற்றவரே // பொங்கி எழும் கோபம் வீழ்ச்சி // பொறுமை பொழிவு பெற்று சிறப்பிக்கும் // பொழுது விடிந்தால் அகம் மகிழ்ந்து, பொறுமையோடு செயல்களை செய்து, பொறுமையோடு எதையும் பேசி கலந்தாலோசித்தால், பொறுமை ஒரு போதும் தோற்றுப்  போகாது. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

காதல் கொண்டேன்

 காதல் கொண்டேன் கல்லூரி நாட்களில் காதல் கொண்டேன்// கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்து இருந்தது // கல்லில் (பாறையில்) பெயரை செதுக்கி வைத்தோம் // கல்லும் முள்ளும் நிறைந்தது காதல் // கண்மூடி கண் திறப்பது போல் இருந்தது // காலங்கள் இதமாக ஓடிக் கொண்டிருந்தது // கனவா கற்பனையா என்று நினைத்தோம் // கலகம் சூழ்ந்தது மரணம் தழுவியது. முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்