Posts

Showing posts from December, 2022

தன்னம்பிக்கை

 தன்னம்பிக்கை வெற்றியின் கைத்தடி தன்னம்பிக்கை// மனதில் தைரியம் தன்னம்பிக்கை// போராட்டத்தின் தொடர்ச்சி தன்னம்பிக்கை// உடல் பலம் வீண் தன்னம்பிக்கை வேண்டும்// விடாமுயற்சி தன்னம்பிக்கை இரண்டுமே நீரும் மீனும் போல// முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை// தடுமாறும் மனிதன் தன்னம்பிக்கையற்றவன்// தன்னம்பிக்கை வாழ்வை // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர

தமிழர் திருநாள்

 🌷தமிழர் திருநாள் 🌷தமிழர்கள் கொண்டாடுவது தமிழர் திருநாள்// 🌷தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையே // 🌷தமிழர் திருநாளின் சிறப்பு விவசாயமே // 🌷தமிழர் திருநாளில் சூரியன் வழிபாடு சிறப்பே// 🌷தமிழர் திருநாளில் புதுப் பானையில் , புது அரிசியில் பொங்கலிடுவது சிறப்பே // 🌷தமிழர்கள் உறவுகளை அழைத்து மகிழ்வது சிறப்பே// 🌷தமிழர் பண்பாட்டை பறைச் சாற்றுவதே தமிழர் திருநாள்// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்
 🌷மனிதன் 🌷பிறர் மகிழ வாழ்பவனே மனிதன்// 🌷மதவெறி | இனவெறி இல்லாதவனே மனிதன்// 🌷பிறர் புகழ் மேல் பொறாமை படாதவன் மனிதன்// 🌷பிறர் துன்பத்தை துடைப்பவன் மனிதன் // 🌷முதியோரை வெறுக்காதிருப்பவனே மனிதன்// 🌷பின்னால் பேசாது முன்னால் அறிவுறுத்துபவனே மனிதன்// 🌷தவறை புரிந்து நடப்பவனே மனிதன்// 🌷எங்கும் நிதானமாக இருப்பவனே மனிதன்// 🌷மற்றவர்களையும் மதித்து நடந்து  அன்பு செலுத்துபவனே மனிதன்// 🌷மனிதன் என்றும் தன்னார்வத் தொண்டனாக வாழ்வதே 🌷🌷 மாமனிதன்// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

வெற்றிப் பயணம்

 🌷வெற்றிப் பயணம் 🌷உன் தோல்விகளையும், 🌷உன் போராடங்களையும், 🌷உன் செயல்களையும், 🌷உன் சிந்தனைகளையும், 🌷உன் வீண் கால விரையத்தையும், 🌷உன் கோபத்தையும், 🌷உன் ஆத்திரத்தையும், 🌷உன் அவசரத்தையும், 🌷உன் ஆக்கங்களையும், 🙏உன் அழிவுகளையும், 🌷உன் மனதிலும், உன் சிந்தனையிலும் 🙏உயிரோட்டமாக சிந்தித்திப் பார்த்தால், 🌷உனக்கு எது தேவை? 🌷உனக்கு எது தேவையில்லை என அறிந்தால், 🌷உன் வெற்றிப் பயணம் இனிதே தொடங்கும். 🌷முற்போக்கு எழுத்தாளர் 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

மகழ்ச்சி

 🌷மகழ்ச்சி 🌷மகிழ்ச்சி வெளியில் இல்லை// 🌷மகிழ்ச்சி 🌷மனதிலுள்ளது// 🌷மகிழ்ச்சி புகழும்போது வேண்டாம்// 🌷மகிழ்ச்சி நம்மோடு பயணிப்பவர்களைப் பொறுத்தே அமையும்// 🌷மகிழ்ச்சியை நாம் இருக்கும் இடத்தில் உண்டாக்க வேண்டும்// 🌷மகிழ்ச்சியை விட நிம்மதியாக வாழ வேண்டும்// 🌷மகிழ்ச்சியானது யாரையும் துன்பம் செய்யக்கூடாது// 🌷மகிழ்வித்து, 🌷மகிழ் என்பதை கடைபிடித்து 🌷மகிழ்வதே உண்மையான 🌷மகிழ்ச்சி// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

சாட்சி

 🌷சாட்சி 🌷மனிதன் பற்றற்ற நிலையில இருப்பது சாட்சி// மனிதனின் செயலால் யாருக்கும் பாதிப்பு இல்லாதிருப்பது சாட்சி// 🌷மனிதன் அகக் கண்ணில் இறைவனைப் பார்த்து  புறக்கண்ணால் இறைவனைப் பார்ப்பது சாட்சி// 🌷மனிதனுக்கு எதைக் கொடுத்தாலும் இறைவன் கொடுத்தது என்று நினைப்பதே சாட்சி// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

குடும்பம்

 🌷குடும்பம் 🌷குடும்பத்தார் உண்மையான அன்பு காட்ட வேண்டும்// 🌷குடும்ப உறவுகளைப் பேணிக்காக்க வேண்டும்// 🌷குடும்பப் பெரியவர்களை மதிக்க வேண்டும்// 🌷குடும்ப ஒற்றுமையை வளர்க்க வேண்டும்// 🌷குடும்பம் எளிமையாகவும், 🌷குடும்பம்  சீராகவும், 🌷குடும்பம் ஆனந்தமாகவும், 🌷குடும்பம் வளமானதாகவும் இருக்க வேண்டுமானால், 🌷குடும்ப நபர்கள்🌷 கோபத்தை ஒழித்து, 🌷குடும்ப நபர்கள் மகிழ்ச்சியாக உரையாட வேண்டும்// 🌷வி.எஸ். ரோமா 🌷கோயம்புத்தூர்

எது அழகு?

 🌷எது அழகு? 🌷நம் மகிழ்ச்சி அழகாக்கும்/ 🌷நம் பார்ப்பவற்றை அழகாக்கும்// 🌷நம் வாழ்வை அழகாக்கும்// 🌷நம் தேசத்தை அழகாக்கும் // 🌷நம் அழகு என்பது மனதிலும், 🌷நம் அழகு என்பது நம் பர்வையிலுமே // 🌷நாம் அனைத்தையும் அழகாய்ப் பார்க்க 🌷நாம் அனைவரும் பழகிக் கொண்டால், அனைத்தும் மகிச்சியே// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

ஒற்றுமை

 🌷ஒற்றுமை 🌷ஒற்றுமையே உயர்வு தருமே //         🌷ஒற்றுமையில்லாதவன் பலமேயானாலும்  வெற்றி பெறுவது சிரமமே.// 🌷ஒற்றுமையில் நாடு, உலகம் இருந்தால் வளர்ச்சி உறுதியே// 🌷ஒன்று சேரும் மழைத்துளிகள் ஆறுகள் ஆகுமே// 🌷ஒற்றுமை மிகுதியானால் இன்பமே // 🌷ஒற்றுமையில்லாவிடில் துன்பம் மிகுதியே // 🌷வி.எஸ். ரோமா 🌷கோயம்புத்தூர்

உண்மை

 🌷உண்மை 🌷உண்மையாக இருப்பது நல் குணங்களில் சிறந்தது// 🌷உண்மையும் முயற்சியும் வெற்றிக்கு வழி // 🌷உண்மையானது உயர்வு தரும் // 🌷உண்மை நேர்மை இரண்டும்  மனிதனுக்கு அழகைத் தரும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அழகானது எது?

 🌷அழகானது எது? 🌷அடுத்தவர்களின் வளர்ச்சி 🌷அடுத்தவர்களின் மகிழ்ச்சி, 🌷அடுத்தவர்களின் திறமை 🌷அடுத்தவர்களின் புகழ் 🌷அடுத்தவர்களின் மன நிறைவான நிகவுகள் 🌷அனைத்தையும் 🌷அகமகிழ்வோடு ஏற்றுக் கொண்டு வாழ்வதே // 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

பேசும் வார்த்தைகள

 🌷பேசும் வார்த்தைகள 🌷வார்த்தைகளை கோபத்தில் விடாதே // 🌷வார்த்தைகள் நல்லதானால் மனவருத்ததுக்கு மருந்து// 🌷வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தக்கூடாது 🌷வார்த்தைகள் அன்பானதாக இருக்க வேண்டும்// 🌷வார்த்தைகள் நன்மை புரிதல் வேண்டும்// 🌷வார்த்தைகளை மலர்ந்த முகத்துடன் உதிர்க்க வேண்டும்// 🌷வார்த்தைகளை விடுவதில் வாழ்ந்தவர்களும் உண்டு// 🌷வார்த்தைகளை விடுவதில் வீழ்ந்தவர்களும் உண்டு// 🌷வார்த்தைகளில் நல்லவற்றை உதிர்த்து நலமாக வாழ்ந்து, நலமுடன் வாழ வைப்போம்// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

நிதானம்

 நிதானம் நிதானம் மனிதனுக்கு மிக முக்கியமே// நிதானம் இழந்தால் மனநிம்மதி குறைவே // நிதானத்தைக் கடைபிடித்து, நிம்மதி பெருமூச்சு விட்டு, மகிழ்வோடு வாழ்வோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பொங்கல் திருநாள்

 பொங்கல் திருநாள் விளைச்சலுக்கு உதவிபுரியும் சூரியன், மண், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதே பொங்கல  திருநாள்// விளைச்சலுக்கும் உழவுத் தொழிலுக்கும் மரியாதை செலுத்தும் நாள்// விளைந்த நெல்மணியால் பொங்கலிட்டு சூரியனை வழிபடும் திருநாள்// விவசாயிகளுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே மகிழ்வு திருநாள்// விளைந்த புது நெல், மஞ்சள், கரும்பு வைத்து வழிபடும் திருநாள்// விவசாயிகள் தோட்டத்திலும், மற்றவர்கள் மனையிலும் கொண்டாடும் திருநாள்// விளையாட்டுப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடையுடுத்தி மகிழும் நாள்// புதுப் பானையில பொங்கிவரும் பொங்கலைக் கண்டு மகிழ்ந்து பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழும் திருநாள். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அன்பு

 மனிதன் மகிழ்வுடன் வாழ அன்பு அவசியமே// அன்பு சமாதானத்தைத் தரும்// அன்பு சாதி, மதம், இனம் வேறுபாடுகளைக் கடந்து நேசத்தை தரும்// அன்பு கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது// அன்பு பெறுவதையும் யாராலும் தடுக்க முடியாது// அன்பால் அகிலமும் ஆளலாம்// அன்பு நிறைந்த அமைதியான உலகை உருவாக்குவோம்// முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

யாரும் யாரிடமும்

 🌷யாரும் யாரிடமும் 🌷யாரிடமும் நியாயத்தை எதிர்பார்க்காதே// 🌷யாருமே அவர்களுக்கான நியாயத்தை வைத்திருப்பார்கள்// 🌷யாருமே குறிக்கோளோடு வாழ வேண்டும்// 🌷யாருக்கும் தீமை தராததாக இருக்க வேண்டும்// 🌷யாரிடமும் அன்பு பாசம் அதிகரித்தால் விபரீதமே // 🌷யாரிடமும் அடிபணிந்தால், 🌷அது நம்மை வீணடித்துவிடும்// 🌷அளவோடு வாழ்வோம் 🌷அற்புதங்களைப் பெறுவோம் || 🌷வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர் 🌷

மண் வளம்

 🌷மண் வளம் 🌷மண் வளம் பாதுகாத்தால் விவசாயம் செழிக்கும் // 🌷மண்ணை நம்பிய தமிழர்களோ ஏராளம்// 🌷மண்ணுக்கு இயற்கை உரங்களே சிறப்பு// 🌷மண்ணுக்கு ரசாயன உரமிட்டு வீணாக்காதே// 🌷மண்ணுக்கு தாவர விலங்கு கழிவுகளிட்டு, 🌷மண் வளம் காத்து இயற்கை விவசாயம் காப்போம்// 🌷மக்கள் நோயின்றி வாழ முயல்வோம் // 🌷மனிதன் முயன்றால் முடியாதது உண்டோ? 🌷முற்போக்கு 🌷🌷🌷🌷🌷🌷எழுத்தாளர் 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

நட்பு

 🌷நட்பு 🌷நட்பு புரிந்து கொள்ளுவதையும்,  🌷நட்பு அனுசரித்து போவதையும், 🌷நட்பு தடம் மாறிப் பயணிக்கும்பொழுது நல்வழி காட்டுதலையும்// 🌷நட்பு மெளனத்தைத் தாங்காத நிலையையும்// 🌷நட்பு  உண்மையோடு வாழ்தலையும், 🌷நட்பு வாழ்க்கை நடைபாதையை செம்மைப்படுத்துதலையும் , 🌷நட்புக்காக உயிரை விட துணிதலையும், 🌷நட்பானது  பிரிவில் நகர்ந்து செல்வதை (காலம்) தாமதித் தலைம்// 🌷நட்பு நல்லவற்றை சரி என்றும், தீயதை தவறு என்றும் உரிமையோடு சொல்லுதலையும் கொண்டிருக்கும்// 🌷நட்பின் மதிப்பு என்றும் உயர்ந்ததே// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

மனம்

 🌷மனம் 🌷மனம் நற்ச்சிந்தனைகளில் ஈடுபட்டு, 🌷மனம் உயர்ந்த நோக்கங்களில் செயல்பட்டு, 🌷மனமானது நல்ல கற்பனைகளை நினைவாக்கி, 🌷மனமானது எதிலும் உறுதி கொண்டு செயல்பட்டு, 🌷மனதில் போட்டி, பொறாமை, பேராசையின்றி, 🌷மனம் ஒற்றுமையை ஆழப் பதித்துக் கொண்டு, 🌷மனமானது தீய எண்ணங்களை நினையாது, 🌷மனமானது சமுதாய சீர்நோக்கோடு செயல்பட்டு, 🌷மகிழ்ச்சி பொங்க வாழவும், 🌷வாழ வழி விடவும் 🌷வாழ்வதே 🌷சிறப்பிலும் 🌷🌷🌷🌷சிறப்பு// 🌷முற்போக்கு 🌷🌷🌷🙏🙏எழுத்தாளர்  🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

வானம் வசப்படும்

 வானம் வசப்படும் வாழ்ந்து காட்டு சோர்ந்து போகாதே// வரும் எதிர்ப்புக்கு வணக்கம் செலுத்து// வருமுன் விழித்திருந்து செயல் படு// வழியில் முள் இருந்தால் தயங்காதே// வஞ்சனைக்கு பயந்து பின் செல்லாதே// வணக்கம் செலுத்து ஆனால் கீழாகாதே" வழக்கமான செயல்களை செய்து விடு// வாழ நினைத்தால் வாழலாம் உறுதி// வரும் துன்பத்தை எதிர்த்து போராடு// வானம் வசப்படும் துணிந்து நில் // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்  '

ஒற்றுமையின் வலிமை

 🌷 ஒற்றுமையின் வலிமை 🌷ஒரு கை ஓசை தருமா? 🌷ஒற்றுமையில் குடும்ப ஒற்றுமை// 🌷ஒற்றுமையில் உறவினர்கள ஒற்றுமை// 🌷ஒற்றுமையில் சமுதாய ஒற்றுமை// 🌷ஒற்றுமையில் நாட்டின் ஒற்றுமை// 🌷ஒற்றுமையில் உலக ஒற்றுமை// 🌷ஒன்றே குலம் ஒருவனே தேவன்// 🌷ஒற்றுமையைப் பிரித்துப் பார்த்தால், 🌷ஒருவருக்கும் உயர்வு இல்லை// 🌷ஒவ்வொருவரும் சிந்தித்தால், 🌷ஒற்றுமை ஓங்கி, 🌷ஒவ்வொருவரும் 🌷மகிழ்வோடு 🌷🌷🌷🌷🌷வாழலாம்// 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

வெற்றி நம் கையில்

 வெற்றி நம் கையில் 🌷நாம் உயர்ந்த  நோக்கத்தோடு பயணிக்க வேண்டும்// 🌷நம் சாதிக்க வேண்டிய நோக்கத்தின் பயணத்தை துரிதப்படுத்த வேண்டும்// 🌷நம் உழைப்பு மிக மிக கடுமையாக இருக்க வேண்டும்// 🌷நம் இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும்// 🌷நாம் சரியாக திட்டமிட்டிருக்க வேண்டும்// 🌷நம்மால் முடியும் என்கின்ற தன்னம்பிக்கை மிக மிக அவசியமே// 🌷நமக்கு வெற்றி மிக அருகில் வந்து விடும்// 🌷வி.எஸ். ரோமா 🌷கோயம்புத்தூர்