வாழ்க்கை வாழ்க்கைப் படகில் பயணிப்பது கடினம்// வாழ்வு முடியும் வரை போராட்டமே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
Posts
Showing posts from January, 2023
விருந்தோம்பல்
- Get link
- X
- Other Apps
விருந்தோம்பல் விருந்தோம்பலே நம் பண்பாடு// விருந்துக்கு பலகாரம் வேண்டுமென்றில்லை// விருந்தினரை மனதார வரவேற்று, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முகமகிழ்வு கொண்டு, விருந்துண்ண அழுது படைத்து, விருந்தோம்பலை தன் கையால் இட்டு, விருந்தினர் முகம்மலர, விரும்பிய உணவேயில்லாவிடினும், விருந்து உண்ண உபசரிப்பு அதிகரிப்பதில் உணவு மிகுதியான சுவையைக் கூட்டும்// விருந்தோம்பலோ மனிதர்களின் தலையாய கடமை// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
முகமறியாத சந்திப்பில தேடினேன் அன்பை
- Get link
- X
- Other Apps
முகமறியாத சந்திப்பில தேடினேன் அன்பை முதிர் வயதில் நடைபாதையில் கைத்தடியாக கிடைத்தது அன்பு// முகமறியாதவர் மனித நேயத்தோடு தாகத்தை தனித்து, முழு ஒத்துழைப்பு என்றும் உண்டு ஆறுதல் வார்த்தையை அள்ளி வீசி, முழுமுதற்க் கடவுளாக வந்து நின்றது போல், முழு நிலவொளியில் இருப்பது போல், முகமறியாதா நபரின் அன்பு அலை வீசியது// முதிர் வயதில் வீசிய அன்பு தென்றல் காற்றை சுவாசித்து, முழு அக மகிழ்வோடு முதிர் வயது காலம் கடந்து வந்தது // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
குருவி
- Get link
- X
- Other Apps
குருவி வீட்டு வாசலில் தானியங்களைப் பொறுக்கும் குருவி// வீடு (கூடு) கட்ட மரம் இல்லாமல் தவிக்கும் குருவி// வீடு (கூடு)இழந்த குருவி பாவம் அல்லவா? வீட்டைக் கட்டிக் கொடுக்க வேண்டுமானால் மரம் வளர்ப்போம்.// வீடு கொடுத்து குருவி இனத்தைப் பெருக்கி, வீடு கொடுத்து விலையில்லா ஆனந்தம் குருவிகளும் அடைந்து, வீடு கொடுத்து விலையில்லா ஆனந்தம் நாமும் பெறுவோம் வீடு பறவைகளுக்கு கொடுக்க மரங்களை அழிக்காது பாதுகாப்போம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
மாட்டுப் பொங்கல
- Get link
- X
- Other Apps
மாட்டுப் பொங்கல உழவுத் தொழிலின சகோதரனே கால் நடைகள்/ கால்நடைகளுக்கு நன்றிகூறுவதே மாட்டுப்பொங்கல்// மாட்டுப்பொங்கல் தை இரண்டாம் நாளே// கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கலிட்டு படையலிட்டு, மாடுகளுக்கு உணவிட்டு வணங்கி, பொங்கல் உண்டு மகிழ்வதே மாட்டுப்பொங்கல்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
நம் செயல்கள்
- Get link
- X
- Other Apps
🌷நம் செயல்கள் 🌷நம் பணியை செம்மையாகச் செய்து, 🌷நம்மேல் நம்பிக்கை வைத்து, 🌷நம் குறைகளை நிவர்த்தி செய்து, 🌷நம் நேரத்தை பயனுள்ளதாக்கி, 🌷நம் முன்னேற்றத்தை படிக்கற்களாக்கி, 🌷நம்மைப்போல் மற்றவரும் என நினைத்து, 🌷நம் சிந்தனைகளை நன்மையாக்கி, 🌷நாமும் மகிழ்வு கண்டு, 🌷நம்மைச் சுற்றியிருப்பவர்களும் மகிழ்வு கண்டு 🌷🌷🌷வாழ வேண்டும். // 🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்
விவசாயம்
- Get link
- X
- Other Apps
விவசாயம் விவசாயமே நாட்டின் முதுகெலும்பு// விவசாயமே நமக்கு உணவு வழங்கி, விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி,விவசாயத்தின் மூலம் நம் பசி தீர்த்து,, விவசாயமே நம் தொழில் என்றாகி, விண்ணை எதிர்பார்க்காது , விளைநிலங்களைப் பயன்படுத்திட விளைச்சல் பெருகிட மழைநீரைத் தேக்கிட ஏரி, குளங்களை கட்டிட முயற்சி செய்திட, விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் முயல்வோம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
அழகு
- Get link
- X
- Other Apps
அழகு பெற்றோர்களுக்கு குழந்தைகள் அழகு// தோட்டத்திற்க்கு விளைச்சல் அழகு // வாலிப வயதில் ஒழுக்கம் அழகு // மொழியில் தமிழ் அழகு// விருந்துக்கு வெற்றிலைத் தாம்பூலம் அழகு , // கண்களுக்கு இயற்கை அழகு நேர்மை மனிதனுக்கு அழகு// சமுதாயப் பணி மனிதனுக்கு அழகு// கற்பனை மிகுதி எழுத்தாளருக்கு அழகு// அடக்கம் அனைவருக்கும் அழகு// மனித நேயம் தேசத்துக்கு நல்லது// வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்