Posts

Showing posts from September, 2023

நான் நேசிக்கும் இதயம்

  நான் நேசிக்கும் இதயம் நான் நேசிக்கும் இதயம் பெற்றோர்களே// நம்மை  நல் மனிதராக பயணிக்க வைத்து,  நல்லது கெட்டது அறிய வைத்து, நம்மீது நேசம் கொண்டு, நல்வழிப் பாதையில் பயணிக்க வைத்து, நம்மோடு சேர்ந்து மகிழும் பெற்றவர்களே. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மாலைப்பொழுது

   மாலைப்பொழுது மாலையில் தீபம் ஏற்றுவது சிறப்பு/ மனம்  மகிச்சியோடு சிற்றுண்டியை உண்போம் // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நான் நேசிக்கும் இதயம்

  நான் நேசிக்கும் இதயம் நான் நேசிக்கும் இதயம் பெற்றோர்களே// நம்மை  நல் மனிதராக பயணிக்க வைத்து,  நல்லது கெட்டது அறிய வைத்து, நம்மீது நேசம் கொண்டு, நல்வழிப் பாதையில் பயணிக்க வைத்து, நம்மோடு சேர்ந்து மகிழும் பெற்றவர்களே. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

சந்தேகம்

 சந்தேகம் சந்தேகம் ஓர் உயிர் கொள்ளி// சம்பவம் எதிலும் சந்தேகம் நிம்மதி இழப்பு. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பறவையின் குடில்

 பறவையின் குடில் பறந்து பறந்து களைப்பு நீங்க, பறவைகளின் குடில் ஓர் அற்புதம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

புத்துணர்ச்சி தெரிகிறது

 புத்துணர்ச்சி தெரிகிறது புதுப்புது ஆடைகளால் புத்துணர்ச்சி தெரிகிறது// புதுமையான படைப்பு  புத்துணர்வு கொடுத்து, புகழ்ந்து பேசுவதில் மற்றவர் மகிழ்ந்து, புவியில் வாழ்ந்து மகிழ்வு பெற்று புத்துணர்ச்சி அமோக விளைச்சலில் கிடைத்து, புன்னகையால் மற்றவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்து,  பது கண்டுபிடிப்புகளில் புத்துணர்ச்சி கிடைத்து, புதுமனை விழாவில புத்துணர்ச்சி கிடைத்து, புது முயற்சிகளில் புத்துணர்வு தெரிந்து, புகழோடு மகிழ்வு புத்துணர்ச்சி தெரிகிறது. புதிய நண்பர்களால் புத்துணர்ச்சி கிடைக்க. புவியில் வாழ்வதில் புத்துணர்ச்சி தெரிகிறது. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மானம்

மானம் மானம் விலை மதிப்பில்லாத சொத்து// மதி மறந்தும் மானம் இழக்கக் கூடாது. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அப்பா

.அப்பா அன்பு அரவணைப்பு அனைத்தும் அறிய உதவுதல் அன்பான பாப்பா அப்பாவின் பாப்பா அகிலம் சிறக்க முன்னேற வேண்டும் அது தானே புகழ் அப்படின்னு அடிக்கடி அன்பாக அமைதியாக உதாரணம் காட்டி வழிநடத்தும், அப்பாவின் சிறப்பு அளவிட முடியாது அப்பா குடும்பத்துக்காக உழைத்து உழைத்து சிரமத்தை சிகரத்தைப் போல் தொட்டவர் // அப்பா குழந்தைகளின் குழந்தைகளிடம் கூட பாசம் மிகுந்தவர் அப்பா இன்றி  அனைத்தும் இல்லை// அதனால் அப்பாவுக்கு வயதான காலத்தில் நாம் பாசம் காட்டி பணிவிடை செய்வோம். அதுதானே நமது பிறப்பின் பலன் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

அம்மா

 அம்மா அம்மா இன்றி நாம் இல்லை// வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

இயற்கை அழகு

 இயற்கை அழகு இயற்கை சூழலில் அமைந்த குடியிருப்பு, இம் மண்ணில் வாழ்வது இயற்கை வரமே // இதுவும்   நம்முயற்சியுடன் ஆண்டவன் கருணையுமே. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

இதுவும் வேண்டும்

 இதுவும் வேண்டும் உண்மை என்றும் நிலைக்கும்// உழைப்பு உயர்வு தரும் // பொறுப்பு மகிழ்வை தரும் // கடமை என்றும் பணிவு தரும். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நீதி

 நீதி கண் எனும் காமிராவினுள் படம் பிடித்து, சாட்சி எனும் பிரிண்டை கொடுத்தேன். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

கைபேசி

 கைபேசி அறிவியலில் கடவுள்  தந்த அகில  பரிசுக்கு, அன்றாடம் நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு உபயோகித்து, அனைத்தும் அறிந்து அறிவில் சிறந்து வாழ்வோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர

அன்பே

 அன்பே (நாய்) என் அன்பே நீயே துணை// எதுவும் உன்னைத் தாண்டி வராது// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நந்தவனம்

 நந்தவனம் நம்மை சொந்த ஆக்கிய இடம்// நாம் கடந்து வந்த பாதைகள்// நம் இனிய வார்த்தைகளை உதிர்த்த இடம் // நம் பாதை எங்கே போய் சேருமோ// நம் இருவர் பாதையும் ஒன்றாகுமா// நம் இதயத்தில் எழும் கேள்விக்குறியே. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மழையில் கலையும் கனவு

 மழையில்  கலையும் கனவு மாவட்ட ஆட்சியர் ஆக  கனவு// மகிழ்ச்சி எங்கே தேடினேன்// மறுபடியும்  வழக்கறிஞர் ஆக முயற்சி// மழையில் நனைந்த வர்ணக் கோலம் போன்றாகியதே . வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

கடிதம்

 கடிதம் கடிதம் நமக்கு ஓர் பிணைப்பு// கடிதம் மகிழ்ச்சி கடல்// கலக்கத்தை பரிமாற்றம் செய்து, கலங்காது செயலை செய்ய வைத்து, கவலைகளை ஒதுக்கி வைத்து, கம்பீரமாக வாழ்வை சீராக செய்து, கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக மாற்றுவது கடிதம்தான். நான் கடிதம் எதிர்பார்ப்பேன் நான் எழுதிய எழுத்துகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் கடிதங்ளின் வருகையால், நான் வாசகர்களின கடிதத்தை அடிக்கடி படித்துப் பார்த்து, நம் எழுத்துக்கு இவ்வளவு பாராட்டுகளா என மகிழ்ந்து, நம்பிக்கை வைத்து எழுத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் ஆனேன். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நான்கும் வேண்டும்

நான்கும் வேண்டும் உண்மை உலகத்தோடு ஒன்று பட வேண்டும்// உழைப்பு உடலில் சீராக இருக்க வேண்டும்// பொறுப்பு எங்கும் எதிலும் வேண்டும்// கடமை உயிர் உள்ளவரை வேண்டும்.  வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

சமூகம்

 சமூகம் சமூகத்தில் அனைத்தும் மாறுபட்டு, சச்சரவுகள் மேலோங்கி நின்று, சஞ்சலம் தரும் மனதோடு, சதாகாலமும் போராடிக் கொண்டு, சமுதாயப் பார்வையில் புன்னகைப் பூத்து, சகலமும் என் கையில் என்று மனம் செயல்பட்டு, சம்பிரதாயம், சடங்கு, ஒற்றுமை மாறுபட்டு, சமூக  கௌரவம் அர்த்தமற்று , சமூகம் அன்றாடம் சடுகுடு  விளையாட்டாகி சகலமும் போராட்டம் நிறைந்த வாழ்வாகிவிட்டது. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நந்தவனம்

நந்தவனம் நம்மை சொந்த ஆக்கிய இடம்// நாம் கடந்து வந்த பாதைகள்// நம் இனிய வார்த்தைகளை உதிர்த்த இடம் // நம் பாதை எங்கே போய் சேருமோ// நம் இருவர் பாதையும் ஒன்றாகுமா// நம் இதயத்தில் எழும் கேள்விக்குறியே. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நமக்கான நாள் வரும்

 நமக்கான நாள் வரும் நம் எண்ண அலைகள் ஓயாது// நல்லது கெட்டது அனைத்தும் ஓடும்// நம் பார்வையில் பட்டது ஓடும் // நம் கற்பனையின் மிகுதியால் ஓடும்// நான் எதிர்பார்த்த சிறந்த எழுத்தாளர் நாள் வரும் // நம் நாடு கொலை, கொள்ளை இல்லாது, நல்லவர்கள் முகத்திரை அறிந்து, நம் நாடு கற்பழிப்பு இல்லாத நாடாகி, நம் நாட்டு மக்கள் சுதந்திரத்தை, நம் சுதந்திரம் என்று கையிலெடுத்து வாழாது,, நாம் பெற்ற சுதந்திரத்தை காத்து, நம் மகிழ்ச்சியை நாமே அழித்து விடாது, நன்மையில் ஒன்றுபட்டு சேர்ந்து பாடுபட்டு, நம் நாடு பலம் பெற்று, நம் குடும்பமும் பலம் பெற்று, நல் சமூகம் என்றாகி, நல் வினைகளை வித்திட்டு வளர்த்து, நமக்கான நாள் வந்துவிட்டது, நாம் கவலையை வேரோடு பிடுங்கிவிட்டு, நலமுடன் மகிழ்வு பெற்று வாழ்வோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்து, கற்பனையால், சிந்தனையால் புத்தகங்களை எழுதி, பேருந்துகளில் திருக்குறள் பலகை வைத்து, தமிழ்நாடு எனப் பெயரிட்டு சிறப்பித்து இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி,  ஆகாஷ் வாணியை வானொலி ஆக்கி, பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடித்து தமிழ் ஆங்கிலம் இருமொழித் திட்டம் கொண்டு வந்து, அண்ணா பேச்சில் எழுத்தில் எடுத்துரைத்து, அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா ஆனார். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

இயற்கை அழகு

 இயற்கை அழகு இறைவன் படைப்பில் இயற்கை அழகு// இயற்கை காட்சி அனைவருக்கும் அழகு// இதைப் பார்த்தால் மனம் குளுமையடையுமே. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர் 2.  அழிக்காதே இயற்கை கொடுத்த வரத்தை பாதுகாத்து, இன்பமாக வாழ வைக்கும் சூழ்நிலையை, இன்றல்ல என்றுமே பாதுகாப்பதே நம் கடமை. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

மலர்

மலர்  மலரே நல் மணதுக்கும், நல் மனதுக்கும் காரணம்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அனைத்தும் நீயே

 அனைத்தும் நீயே இறைவா உன் பாதம் பணிந்தேன்// இன்றுவரை சோதனை மேல் சோதனை // இருப்பிடம் நோக்கி தியானம் செய்தேன்// இல்லறம் துறந்து உன்னையே நினைத்தேன்// இறைவா எனக்கு அருள் புரிவாய் // சரணடைந்தேன் எந்நேரமும் உன்னை நினைக்கின்றேன்.  வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பொறியாளர்கள்

  பொறியாளர்கள் கட்டிடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு,// கலங்காது விடா முயற்சி செய்து,// கல்லும், மண்ணும் கட்டிடத்திற்கு உறுதியாக்கி, // கடும் முயற்சியால் காலத்தை வீணாக்காது,// கற்பனைகளை அழகான வடிவமைப்பில் வார்த்தெடுத்து,// கடும் வெயில், கடும்மழையைத் தாண்டி போராடி, // கம்பீரமாய் பல அடுக்கு மாடிகளையும், // கம்பீரத் தோற்றத்தோடு மாளிகை வீடுகளையும், // கரடு முரடு பாதைகளை சரியாக சீராக்கி, // கற்பனையோடு பொருளாதாரத்தையும் ஆலோசித்துப் பார்த்து செய்பவரே பொறியாளர்கள். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பொறுமை

 பொறுமை பொறுத்துக் கொண்டால் அமைதி நிலவும்// பொறுமையோடு இருந்தால் ஒற்றுமை ஓங்கும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மெளனம்

 மௌனம் மௌனம் சம்மதம் சொல்லும் வார்த்தை// மெளனம் வீண்வாதம் வேண்டாம் என்ற நிலைமை// மெளனம் கலக்கத்தின் உச்ச அறிகுறி// மௌனம் ஆழ் மனதில் பதிந்த சம்பவம்// மெளனம் யார் மீதும் சாராத நிலைமை// மெளனம் அதிக சோகத்தின் வெளிப்பாடு.. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பணம்

 பணம் பணம் இருந்தால் பகை இருக்காது// பணம் எதையும் விலைக்கு வாங்கும்// பணம் இருந்தால் பதவி கிட்டும்// பணம் பெருகினால் புகழ் கிட்டும்// ஆனால், பணத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாது // பணத்தால் இயற்கை நியதிகளை மாற்ற முடியாது// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

முன்னேற போராடு

 முன்னேற போராடு வாழ்வில்  பொருளாதாரம்   முன்னேற போராடு// வறுமையை ஒழித்து முன்னேற  போராடு// வழி சீராக சமூகத்திற்காக போராடு// வன்முறை ஒழிய தேசத்திற்காக போராடு// வஞ்சகம் ஒழிக்கும் வாழ்வுக்காக போராடு// வரவு எதிலும் அதிகரிக்க போராடு// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வலிமையில் பெரிய வலிமை

 வலிமையில் பெரிய வலிமை வலிமை என்பது தன்னம்பிக்கையே // வலிமையில் மனவலிமை தன்னம்பிக்கை மூலமே கிடைக்கும்// வலிமையில் உடல் வலிமை தானாகவே கிடைக்கும்// வலிமையில் தன்னம்பிக்கை, மனவலிமை, உடல் வலிமை மூன்றும் நம்மை உயர்த்தும்// வலிமை பெற்றால் நம் உயர்வு// வலிமை பெற்றால் குடும்ப உயர்வு // வலிமையிலும் வலிமை பெற்றால் நம் தேசமே உயர்வு. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மனசு

 மனசு மனம் போன போக்கில் போகும்// மனசை அடக்க யாராலும் முடியாது// மனசு நல்லது கெட்டது ஓட்டும்// மனசை  புயல் ஆனால் ஆபத்தே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்