என்னுள் நான்
🌷என்னுள் நான் 🌷மக்கள் பணிக்காக மாவட்ட ஆட்சியாளராக விரும்பினேன்// 🌷மக்கள் சேவையாக வழக்கறிஞர் ஆக விரும்பினேன்// 🌷மக்களோடு தொடர்புடைய எழுத்தாளர் ஆக விரும்பினேன்// 🌷மனது நினைத்தது, 🌷மாறாமல் நடந்தது// 🌷மனதில் உதிக்கும் கற்பனைகளை, 🌷மட மடவென எழுதி மக்களிடம் சேர்ப்பேன்// 🌷மக்கள் சேவையாக சமூகம் சார்ந்தவைகளை எழுதுகின்றேன்// 🌷மகுடம் வேண்டாம்// 🌷மக்கள் சீர்கேட்டை , 🌷மக்கள் சிந்திக்க 🌷மனதில் உதித்தவைகளை எழுதுகின்றேன்// 🌷மன்றாடினாலும், 🌷மாறாதோர், 🌷மனதை சிந்திக்க வைத்துவிடும் எழுத்து களின் வரிகளைத் தாங்கியப் புத்தகம் என்ற புதையல்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்