Posts

Showing posts from April, 2024

உதிரம் சிந்தும் உழைப்பாளி

 உதிரம் சிந்தும் உழைப்பாளி உழைத்து உழைத்து முன்னேறி, உண்மையாக முதலாளியை உயர்த்திய, உத்தமனே! வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

புத்தக வாசிப்பு

 புத்தக வாசிப்பு புத்தக வாசிப்பு அறிவு களஞ்சியம் // புத்தகம் படித்தால் மனது புத்துணர்ச்சி // புத்தகம் நமக்கு ஓர் நண்பன் || புத்தகம் வாசிப்பு நேரம் உபயோகம் // புத்தகம் படித்தால் உலகம் அறியலாம் // புத்தக வாசிப்புக்கு  வயது இல்லை // புத்தகம் வாசிப் பின் பயன் எண்ணிலடங்காதவை // புத்தக வாசிப்பு நம் சுவாசிப்பு. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

சுயநலமிழந்த மனிதர்கள்

 சுயநலமிழந்த மனிதர்கள் சுயநலமில்லாத மனிதர்கள் சுயமாக சிந்திக்காது, சுறுசுறுப்பாக இருப்பது போல நடந்து கொண்டு, சுற்றித்திரிந்து களைப்பு மிகுதியால் சோர்ந்து, சுருட்டிக கொண்ட துணி பையை வைத்துக் கொண்டு, சுறுசுறுப்பின்றி சும்மா வருந்திக்கொண்டு, சுகவீனம் தாக்கி விட்டாலும் பெரிது படுத்தாது, சுகவாழ்வு பற்றி அறியாது சிரித்துவிட்டு,  சுறுசுறுப்பாவது மாதிரி நமக்கு தெரிந்தாலும், சுயநலமிழந்து வார்த்தைகளை உதிர்த்து விட்டு, சுற்றியிருப்பவர்கள் சிரிக்கவும், தானும் சிரிப்பார்கள். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

உனை வீழ்த்த யாருமில்லை

 உனை வீழ்த்த யாருமில்லை உன் மனதில் தன்னம்பிக்கை வை // உன் தைரியம் உன்னை எதிர்க்க வைக்கும் // உன் மன அழுத்தம் நீக்கி உன் மன மகிழ்ச்சியை ஏற்படுத்து, உன் எதிர்வினைகளை எதிர் கொண்டு, உன்  பயம் கவலையை பிடுங்கி எறி,  உன் சோம்பேறித்தனத்தை வேரோடு பிடுங்கு, உன் உண்மையை, மனித நேயத்தை கடைபிடி, உலகம் உன் கையில் என்றுணர்ந்து, உன் சிந்தனைகளை நல்விதத்தில் ஓடவிடு, உன் பலவீனம் மனதிலும் வேண்டாம் உன் பலவீமை உடலிலும் வேண்டாம். உனை வீழ்த்த யார் இனி வருவார்? வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

கல்லும் கண்ணாடி விரிசலும்

 கல்லும் கண்ணாடி விரிசலும் கல்லை சிற்பி உளியால் செதுக்கி, கல்லை கடவுளாக்கி நாம் வணங்கிட, கல்லை சிற்பி கடவுள்  ஆக்கினான். கல் கண்ணாடி மேல் பட்டால் உடைந்து விடும் // கல் போன மனதை வைத்து விடு, கண்ணாடியாக இருந்தால் மனம் உடையும் // கல் அடி பட இடம் தராதே // கல்லிலும் பாறாங்கல் போல் வாழ்ந்து விடு// கல்லாக நற்ச் செயல்களுக்கு வேண்டாம் // கல்லும் கரையும் போல நல்லதில் இருந்து விடு. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

கப்பல் பயணம்

 கப்பல் பயணம் கப்பலில் பல தேசத்து மக்கள் கூட, கப்பலின் சொகுசு அறை வசதி, கப்பலில் திரையரங்கு சிற்றுண்டி விடுதி, கப்பலில் நீச்சல் குளத்தில் நீச்சல், கண்கொள்ளா காட்சியாக மனதை கவர்ந்தது. கப்பல் பயண சிநேகம் புத்துணர்ச்சியோடு கப்பல் பயணம் பசுமரத்தாணி ஆகி, கடல் அலைகள் போல வந்து போனது. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்