Posts

Showing posts from June, 2024

மரம் வளர்ப்போம்

 மரம் வளர்ப்போம் மரம் வளர்த்தால் மழை வரும் // மரங்களை வெட்டாது காடுகளை வளர்த்து, மனிதன் மழையைப் பெருக்கி தேக்கி வைத்து, மகிழ்வோடு இயற்கை விவசாயம் செய்து, மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, மனதார நாட்டின் வளத்தை உயர்த்தி,  மனிதன் இயன்ற அளவு இரசாயனமின்றி, மகிழ்வோடு இயற்கை பழங்களை உண்டு, மருத்துவரிடம் காசு கொடுக்காது வாழ்ந்து, மருந்துண்பதைத் தவிர்த்து நோயாயை விரட்டி, மண்ணின் வளத்தை மற்றவர்களுக்கு காட்டி, மனிதனின் உழைப்பை உயர்த்திக் காட்டி, மரங்களை நடுவோம் நிழல்களை பெறுவோம்//   மற்றவர்களுக்கு உபயோகமாகவும் மரம் வளர்ப்போம் | மரம் பறவைகளுக்கு ஓர் அடைக்கலம் மரம் வளர்ப்பு நாட்டின் பொருளாதார உயர்வு. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர் ம.

தன்னம்பிக்கை

 தன்னம்பிக்கை தனி மனிதனின் மனதை சீராக்கும் // தனக்கு நிழல் போல். இருக்கும் // தளராத மனமானது கம்பீரமாக இருக்கும் // தடுமாற்றம் இல்லாத செயல்களை செய்விக்கும் //  தனது செயல்களின் வேகத்தை ஊக்கும் // தன் மேல் நம்பிக்கையிருந்தால்  அனைத்தும் சுகமே. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

அன்பு

 அன்பு அன்பு உண்மையில் அனைவரையும் ஈர்க்கும் // அன்பால் உலகை ஆண்டு மகிழலாம்/ அன்பு குடும்பத்தை முன்னேற வைக்கும் // அன்பு இன்றி உறவுகள் இல்லை // அன்பு இருந்தால் நட்பு நீடிக்கும் // அன்பு சாதிக்கும் வல்லமை உடையது// அன்பு அனைத்தும் ஒத்துப் போகும் // அன்பு சகோதரத்துவம் கொண்டு வெல்லும் . வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

இனியவை

 இனியவை இன்முகத்துடன் இருப்பது இனியவை // இரவு பகல் பாராது உழைப்பது, இனிய வார்த்தைகள் பேசி மகிழ்விப்பது, இன்னாரை பகை கொள்ளாது இருப்பது, இன்னல்களை சாதுர்யமாக எதிர் கொள்வதும், இடையூறுகளை தகர்த்து விட்டு முன்னேறுவதும், இன்று போய் நாளை என்று இல்லாதிருப்பதும், இன்றும் என்றும் நல்லதை நினைப்பதும், இக்கட்டான சூழ்நிலைகளை அறிவால் வெல்வதும், இதுவல்லவோ இனிய செயல்கள் அல்லவா? வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

தந்தைக்கோர் கவிதை

 தந்தைக்கோர் கவிதை தந்தையின்றி நம் பிறப்பு இல்லை // தந்தை குடும்பத் தலைவனாக இருப்பதால், தலை நிமிர்ந்து உலா வருவோம் // தந்தையின் நிர்வாகம், அறிவுரை உயர்ந்ததே // தந்தையின் அரவணைப்பு, ஆறுதல், கண்டிப்பு தந்தையின் சிரிப்போடு கூடிய அறிவுரை, தந்தையின் உறவுப் பாலம் சீரமைப்பு, தந்தையால் முன்னேற்றம் இவைகளே  மாபெரும் சிறப்பு . வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

 தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தந்தையின் அறிவுரை உயர்வையும்,  தடம் மாறா வாழ்வையும், நமக்கு கொடுக்கும். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

சூழ்நிலை

 சூழ்நிலை என் சூழ்நிலை பாரம் தூக்கினேன்// என்னை கவனிக்க ஆள் இல்லை // என் கல்வி எங்கே போனது? என் பெற்றவர்கள் எங்கே போனார்கள் // என் உறவுகள் எங்கே மறைந்தது// என் துயரம் என்னை கலக்கியது // என்றாலும் நான் மடிந்து போகாது, என்னை உயர்த்த கடுமையாக உழைப்பேன். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

விவசாயம்

 விவசாயம் விவசாயி இன்றி நமக்கு உணவில்லை// விவசாயம் நமக்கு ஆண்டவனின் கொடை // விவசாயம் மண்ணிற்கு ஏற்றபடி விளையும் // விவசாயிகள் வியர்வை சிந்தி பாடுபட்டு, விளைச்சலைப் பெருக்கி நாட்டுக்கு பொருளாதாரமும், விவசாயிகளுக்கு தொழிலையும் வருமானத்தையும் கொடுத்து, விளைச்சலைப் பெருக்கி அயல் தேசத்துக்கும். விவசாயத்தால் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்குவது மகிழ்ச்சியே // வி.எஸ். ரோமா கோயம்புத்தூர் கவிதை வரிகள் - 8

இரயில் சிநேகம்

 இரயில் சிநேகம் இரயில் சிநேகம் இறங்கும் வரை. இரயிலில் நட்பு தொடர்ந்து, இருப்பது அரிதே. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

உறவுப்பாலம்

 உறவப்பாலம் உறவுகள் ஒற்றுமையை கடைபிடித்து வாழ்ந்து, உண்மையான உணர்வுகளோடு கூடி மகிழ்ந்து, உறலோடு ஒத்து வாழ்ந்து மகிழ்ந்து, உன் குடும்பம் என்றில்லாது நம் குடும்பமாக, உறவாடி கலந்தாலோசித்து மகிழ்வித்து மகிழ்வோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர

ஆருயிர் நண்பனே

 ஆருயிர் நண்பனே அகத்தில் இருப்பதை அனுதினமும் அறிந்திடுவாய் || அறிவை பெருக்கி புகழுக்கு உதவுவாய் // அன்பாகப் பேசி மனதை தேற்றுவாய் // அடிக்கும் இடத்தில் அடித்து புகட்டுவாய் // அலாரம் அடித்தாற்போல் என்னை சந்திப்பாய் // அடுத்தவர் பேசுவதை தட்டிக் கேட்பாய் // அனைத்து அறிந்தாலும் அறியாயது போலிருப்பாய் // அனைத்து ஆலோசனைகளையும் பறிமாற்றம் செய்வோம் // அன்புக்கு அடிமை என்று வீழ்வோம்// அளவில்லா மகிழ்ச்சிலும் பரிமாற்றம் செய்வோம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

நமது சூழல் நமது பொறுப்பு

 நமது சூழல் நமது பொறுப்பு நம் சுத்தம் நமக்கு சுகம் // நம்மை  சுற்றியிருக்கும் அனைத்தையும் சுத்தமாக, நலம் காக்க சுகாதாரமாக வைத்து, நம் மண்ணுக்கு மக்கும் குப்பை, நம் மண்ணுக்கு மக்காத குப்பைாக, நம் சோம்பேறித்தனத்தை விட்டு பிரித்து, நம் நாட்டு மண்வளம் கால்நடைகளின் நலம் காத்து, நாடு சுகாதாரத்தோடு இருந்து நோயின்றி வாழ்வோம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

வாய்மை யாதெனில்

வாய்மை யாதெனில் உலகில் வாய்மை அழிந்து வருவதால், உண்மையும் ஒழிந்து சீர்கேடுகள் நிறைந்து, உலகம் அனைத்திலும் தத்தளித்து மூச்சி திணறி, உண்மையில் தீமையில்லாத சொல் பேசாது, உலக மக்கள் ஒற்றுமை தடுமாறி, உள்ளத்தில் மனசாட்சி இல்லாதது திண்டாட்டம்தான். வி. எஸ்.ரோமா கோயம்புத்தூர்