Posts

Showing posts from March, 2024

ஜன்னலோரப் பயணம்

 ஜன்னலோரப் பயணம் ஜன்னலோரம் உட்கார்ந்தால் வேடிக்கை பார்க்கலாம // ஜன்னலோரம் இயற்கை காட்சி, கடந்து செல்லும் வண்டிகளை, ஜன்னலோரப் பயணம் கண்ணுக்கு விருந்து, ஜன்னலோர இரயில் பயணம் மறக்க முடியது. வி. எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு நீரே மனிதர்களுக்கு மிக முக்கியம// நீரே விலங்கினங்களுக்கு அவசியம் // நீரின்றி செடி கொடி மரங்கள் ஏது? நீரின்றி தூய்மை அமைவது சிரமம் // நீர் விவசாயத்திற்கு மிகவும் அவசியம் // நீரினால் மரம் மரத்தினால் பிராணவாயு // நீரே அனைத்து ஜீவராசிகளுக்கும்  ஆதாரம் // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வானவில்

 வானவில் வானவில்லை பார்த்ததும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை// வானவில்லின் ஏழு வர்ணங்கள் அழகு // வானத்தில் தோன்றி மறைவது ஏமாற்றமே // வானவில் நீ நிரந்தரமாக இருக்க முடியாதா? வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

நிலை மாறும் உலகில்

 நிலை மாறும் உலகில் நீதியாக பேசும் தீர்ப்பு எங்கே? ஒற்றுமையை கடைப்பிடித்து வாழ்வது யார்? விருந்தோம்பல் உபசரிப்பு இன்று எங்கே? குடும்ப உறவுகள் முறை எங்கே? ஓடி வந்து காப்பாற்றுவது எங்கே? பொருளாதாரம் குறைந்தால் உதவுவது எங்கே? அசல் இல்லை நகல் நடக்கிறது// ஒத்துப் போய் வாழ்ந்து மடிவது எங்கே? இயற்கை விவசாயம் அழிவது அதிகமே " அன்பும் ஆதரவும் விலை போகின்றதே? வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

சேமிப்பு

 சேமிப்பு சிறுசேமிப்பு நலமே // சிறுக சேமித்து வைத்து பழகுவது, சிலநேரங்களில் காக்கும். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

கடந்து செல்வதே வாழ்க்கை

 கடந்து செல்வதே வாழ்க்கை விளையாடும் பருவத்தில் விளையாட்டில் தோல்வி // படிக்கும் பருவத்தில் கல்வியில் தோல்வி // வாலிபப் பருவத்தில் காதல் தோல்வி // தொழிலில் போட்டி பொறாமையால் தோல்வி // குடும்பத்தில் உறவு முறிந்த தோல்வி // எவரும் உதவாத நிலையில் தோல்வி // சொத்து வருவதில் போட்டியால் இழப்பு // எதிலும் ஏற்றத் தாழ்வுண்டு புத்திமதி// கடைசியில் உடல் கெட்டு துன்பம் // அனைவரும் அனைத்தையும் கடந்து செல்வதே வாழ்க்கை வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

சிட்டுக்குருவி

 சிட்டுக்குருவி உன் ஒலி மன அழுத்தத்தை குறைக்கும் // சிட்டுக்குருவி உன் எச்சம் மரங்களை வளர்க்கிறது// சிட்டுக்குருவி குஞ்சுகளை பாதுகாக்க நாம் உறைவிடம் கொடுத்து, சிட்டுகள் குதூகலமாக பறந்து செல்ல துணை புரிந்து, சிட்டுக்குருவியின் உணவோ சோளம், நெல் தானியங்களே // சிட்டுக்குருவி உன் தினத்தை மார்ச் 20 உலகமே கொண்டாடுவது சிறப்பே // வி. எஸ். ரோமா கோயம்புத்தூர்

மனம் ஓர் மந்திரப்புதையல்

 மனம் ஓர் மந்திரப்புதையல் மனம் நல்லது நினைத்தால் நல்லது// மனமானது தீயது சிந்தித்தால் தீயது // மனம் ஓர் குரங்கு உண்மையே // மனமானது தனிமையில் சிந்திக்கவும் முடியும் // மற்றவர்களுடன் சேர்ந்து சிந்திக்கவும் முடியும் // மனதை அடக்க நினைப்பவன் மகான் // மனதை ஒரு நிலைப்படுத்த தியானம் அவசியம் // மனம் ( மந்திரகோள், ஆழ்மனதில் ( புதையல்) நினைப்பது நடக்கும். வி. எஸ். ரோமா கோயம்புத்தூர்

ஒற்றுமையே வலிமை

ஒற்றுமையே வலிமை ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு உண்மையே // ஒரு மரம் தோப்பு ஆகுமா? ஒற்றுமை இல்லாமல் வீணான மனிதனே ? ஒற்றுமையோடு வாழ்ந்து ஜெயம் கொண்டிடு // ஒருவரும் இல்லாமல்  வாழ்வது சிரமம் // ஒற்றுமையே நாளும்  மனவலிமை தந்திடும் // ஒற்றுமை உடல் வலுவையும்  தரும் // ஒற்றுமையோடு வாழ்வது மனதிற்கும் மகிழ்வே // வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

மனிதம் காப்போம்

 மனிதம் காப்போம் மனிதன் மனிதனை மதிக்க வேண்டும்// மக்களுக்கு உதவி செய்தல் வேண்டும்// மனதளவில் வஞ்சகம் நினைக்கக் கூடாது// மனிதன் நல்ல செயல்களை செய்தல் வேண்டும்// மனிதன் மற்றவரை புண்படுத்தும் வார்த்தைகள், மற்றவரை புண்படுத்தும் செயல்களை செய்யக்கூடாது// மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு வேண்டும்// மனிதனின் அன்பே அனைத்தும் நல்லதாகும். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

சமையலறை முதல் சந்திராயன் வரை பெண்கள்

சமையலறை முதல் சந்திராயன் வரை பெண்கள் பெண்கள் என்றாலே அனைத்தும் அறிந்தவர்கள் // பெண்களுக்கு அடுப்பு வேலையும் தெரியும்// பெண்களுக்கு விண்வெளி செல்லவும் தெரியும்// பெண்களின் விண்வெளிப் பயணம் சாதனையே // பெண்ணின் சமையல் கலை பாராட்ட படுவது இயல்பு // பெண்ணின் விண்வெளிப் பயணமும் இயல்பே // பெண்ணானவள் சமைக்கும் நாயகி அல்ல || பெண் சாதிக்கும் சரித்திர நாயகியே // வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

வயது போனால் .......

 வயது போனால் ....... வயது போனால் என்ன   கவலை ? வயதுக்கும் மகிழ்ச்சிக்கும் என்ன தடை? வரும் முன் நோயில்லாது காப்போம்// வயதான காலத்தில் சேமிப்பை பயன்படுத்துவோம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

உழைப்பே மூலதனம்

 உழைப்பே மூலதனம் உழைப்பு இன்றி சோம்பி திரிவது வேண்டாம் // உறக்கமின்றி அயராது உழைத்து முன்னேறு// உன் உழைப்பு உன்னை உயர்த்தும் // உழைத்தால் உணவு உண்டாலும் மகிழ்ச்சியே // உழைக்கும் பழக்கம் ஏற்ற தாழ்வு இல்லை // உழைக்காமல் பணம் முதலீடு செய்தால் அழிவே // உழைப்பே மூலதனத்தின் பெரும் பங்கு // உழைப்பை மூலதனமாக்கி முன்னேறுவோம் மகிழ்வோம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

சாலை விதிகளை மதிப்போம

 சாலை விதிகளை மதிப்போம சாலையை கடக்கும் பொழுது கவனம் // சாலையை வீடாக நினைத்து விட்டாயா? சடுகுடு விளையாட்டை இங்கே வைக்கலாமா? சாலையை கடக்கும் போது  கைபேசி தேவையா? சட்டுன்னு வாகனம் மோதி விட்டால்? சண்டை போட்டு என்ன பிரயோசனம்? சட்டுன்னு விபரீதம் ஆகி விடுமே? சாலை விதிகளை மீறினால் உயிர் ? சற்று சிந்தித்த பார்த்தால் புரியும். சாலை விதிகளை மீறினால் உயிர் சேதம் சற்றும் தாமதிக்காமல் விபத்து நடக்கும். சாலையை கடக்கும் போது கவனம் தேவை. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தொலைபேசியா தொல்லைபேசியா

தொலைபேசியா  தொல்லைபேசியா தொலைபேசியால் நன்மைகள் தீமைகள் உண்டு// தொல்லை என்று நினைத்தால் தொல்லையே // தொலைவில் எட்டாது இருந்தாலும் பேசலாம்// தொலைவில் இருந்தாலும் . நிழலே// தொலைபேசி மூலம் கடலைத் தாண்டலாம்// தொலை தூரம் போனாலும் கவலையில்லை// தொலைபேசியால் தொல்லைகள் இருந்தாலும் நன்மையே // தொல்லை என்று நினைத்தால் தொல்லையே // தொலை பேசியேலில்  செலவு குறைவே // தொலைபேசி மூலம் உரையாடுவது இன்பமே வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

இராணுவ அப்பா

 இராணுவ அப்பா இன்று எதிர்பார்த்து காத்திருந்தது வீணாகவில்லை// இராணுவ அதிகாரி மகள் என்கின்ற பெருமிதம் // இன்று அனைவரும் பார்க்க எனக்கு, இராணுவத்தின் மதிப்பு அப்பாவோட சேர்ந்து அதிகமானது. இது மட்டுமா அப்பாவோட அன்பளிப்பும் // பெற்றுக்கொள்ளும் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்                    .

பொறுமையும் பொறாமையும்

 பொறுமையும் பொறாமையும் பொறுமை மனித இனத்துக்கு தேவை // பொறுமையோடு இருந்தால் பூமியை ஆளலாம்// பொறுமை மனிதனை உயர வைக்கும் // பொறுமை நோயை விரட்டி ஓட்டும்// பொறாமை மனிதனுக்கு தீய குணம் // பொறாமை மனித வாழ்வுக்கு போராட்டம் // பொறாமை உடலில் வியாதியை கொடுக்கும் // பொறாமை மனிதனின் அழிவுக்கு காரணம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

வாழ்க்கைப் பயணத்தில்

 வாழ்க்கைப் பயணத்தில் வாழ்க்கைப் பயணத்தில் மேடு பள்ளம் உண்டு// வாழ்க்கைப் படகு நீரில் மிதப்பது போல் // வாழ்வது வீழ்வது எதுவும் நடக்கும் // வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சிக்கு நாமும் காரணமே // வாழ்க்கைப் பயணத்தை சுகமாக பயணிக்க முயற்சி செய்வோம்// வாழ்வததே சிறந்த வழிகாட்டியாக நினைத்து பயணிப்போம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூ