Posts

Showing posts from November, 2024

உயிர்க்கொடை

 உயிர்க்கொடை இரத்த தானம் இரத்தத்திற்கு சாதி, மதம் ஏது? இரத்தத்தின் ஒரே நிறம் சிவப்பு // இரத்தம் கொடுத்து உதவுவது உயிர் கொடை // இரத்தம் கொடுப்பதற்கு உறவு தேவையில்லை. வி. எஸ்.ரோமா கோயம்புத்தூர்

கைப்பேசி

 🌷கைப்பேசி🌷 🌷கைப்பேசியே உன் வரவு மகிழ்வே // 🌷கையடக்க வரவால் உலகமே என் கையில் // 🌷கைப்பேசி நீ உலக நூல் நிலையம் // 🌷கைபபேசி மூலம் நூல்களைப் படித்து அறிவை விருத்தியாக்கினேன்// 🌷கையில் வைத்தால் அனைத்தும் அறியலாம் // 🌷கைப்பேசி உன்னால் நான் அறிவாளி ஆனேன்// 🌷கைப்பேசி உன்னால் நன்மையும் தீமையும் சமமே// 🌷கை விரலை மீட்டு அறியலாம் // 🌷கைப்பேசி  சொல்வதில்லை எதை பயன்படுத்து என்று ? 🌷கைப்பேசி நான் உன் நல்லதை பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில், 🌷கையடக்க பாதையில் பயணம் செய்து, 🌷கைகளை மேலோங்க கைதட்டி மகிழ்வேன்// 🌷கையாலாகாத மனிதனே பெயரை ஓட்டினேன்// 🌷கையில் வைத்துக் கொண்டே வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டேன்// 🌷கைப்பேசியை கண்டு பிடித்தவரை மனதார வாழ்த்தினேன் // 🌷கைப்பேசியே அயல் நாடுகளுக்கு செய்தியை அனுப்பினேன்// 🌷கைப்பேசியை என்றும் என் கையை விட்டு அகல விட மாட்டேன். 🌷வி. எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

காலத்தின் கோலம்

 காலத்தின் கோலம் உறவுகளின் விளையாட்டில் எத்தனை மாற்றங்கள் // சகோதர சகோதரிகள் பேச்சில் மாற்றம் // பெற்றவர்களை பேச வைப்பதில் மாற்றம் // உறவுகளிடம் ஒருவருக்கொருவர் செயல்பாடுகளில் மாற்றம் // மற்றவர்களிடம் பேச்சில் சிக்கலான மாற்றம் // நம்மிடம் மனதில் வேதனையால் மாற்றம் // என்னவென்று அறிவதற்குள் மாற்றங்களோ அதிகம் // யார் வாக்கில் மாறினாலும் தன்னம்பிக்கை வேண்டும். வி. எஸ்.ரோமா கோயம்புத்தூர்