Posts

Showing posts from January, 2024

பசுமை

 பசுமை வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்து, வரும் காலம் நல்ல காலமாக, வரமாக  பசுமையாக மகிழ்ச்சி பெற்று, வந்தது வருவது வரப்போவது என்று, வளத்தில் சிறக்க வாழ முயல்வோம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

என் சுவாசமே

 என் சுவாசமே என் மூளைக்கு வேலை கொடுத்து, என் நேரத்தை உபயோகம் செய்து, என் பலவீனத்தை பலமாக செய்து, என் தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்து, என் வாசிப்பை மற்றவர்களுக்கு சொல்ல வைத்து, என்றும் மாறாத செயலாக வைத்து, எப்படியும் முடித்து விடலாம் என்றாகி, எதுவானாலும் அறிந்தது போல் செயல்பட்டு, என் அறிவு விருத்தியாக வாசிப்பை அதிகப் படுத்தி, என் பலத்தால் சோதனையை சாதனையாக்கி, என் சுவாசமே என் வாசிப்பாகியது. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

வானொலி

 வானொலி 🌷வானொலி மக்களிடம் விரைவாக செய்திகளை கொண்டு சேர்ப்பதும், 🌷வானொலி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கொடுப்பதும், 🌷வானொலி என்றாலே அன்றும் இன்றும் நேயர்களை அதிகரிப்பதும், 🌷வானொலி வானிலை ஆராய்ச்சி முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை கொடுப்பதும், 🌷வானொலி என்றாலே இனிய பாடல்களை கேட்பதும், 🌷வானொலி நேயர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே / 🌷வானொலியின் தந்தை மார்க்கோனிக்கு நன்றிகள் உரித்தாகுக. 🌷வி.எஸ். ரோமா 🌷கோயம்புத்தூர்

மாண்புடைய வாழ்வென்பது

 தலைப்பு மாண்புடைய வாழ்வென்பது 🌷மனிதன் வாழ்வது மன மகிழ்வுக்கே // 🌷மனமானது இரக்க குணம் கொண்டு, 🌷மற்றவர்களை மனதார பாராட்டி மகிழ்வித்து, 🌷மகிழ்ந்து வாழ்வதே மாண்புடைய வாழ்வென்பது. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

வரும் ஆண்டு வளமாகட்டும்

 வரும் ஆண்டு வளமாகட்டும் நினைத்தது நடக்க முயற்சி செய் // நினைவில் நல்லது மட்டுமே இருக்கட்டும்// நிழல் போல் நல்லதை செய் // நிகழ்வுகளை நன்று செய்து, நிம்மதி எனும் மூச்சு விட்டு, நிதர்சனமாக உறவுகளை நேசித்து மகிழ்ந்து, நின்று விடாதபடி உறவுகளை அனைத்து, நிலா போல் வெளிச்சம் மிகுதி கொண்டு, நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி கொண்டு, நிகழ்ச்சி என்றாலே மகிழ்ச்சி என்றாகி, வாழ்வோம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

தமிழர் திருநாள்

 தமிழர் திருநாள் தமிழர் திருநாளானது விவசாயத்தை நினைத்து மகிழ்ச்சி கொண்டு, தமிழர் திருநாளன்று சூரியனை வணங்கி, தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தி, தமிழர்கள் இயற்கையை போற்றி வாழ்ந்து வருவதை பெருமை படுத்துவதுமே தமிழர் திருநாள் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்