என் சுவாசமே
என் சுவாசமே
என் மூளைக்கு வேலை கொடுத்து,
என் நேரத்தை உபயோகம் செய்து,
என் பலவீனத்தை பலமாக செய்து,
என் தன்னம்பிக்கையை மேலும் அதிகரித்து,
என் வாசிப்பை மற்றவர்களுக்கு சொல்ல வைத்து,
என்றும் மாறாத செயலாக வைத்து,
எப்படியும் முடித்து விடலாம் என்றாகி,
எதுவானாலும் அறிந்தது போல் செயல்பட்டு,
என் அறிவு விருத்தியாக வாசிப்பை அதிகப் படுத்தி,
என் பலத்தால் சோதனையை சாதனையாக்கி,
என் சுவாசமே என் வாசிப்பாகியது.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment