இனியவை

 இனியவை


இன்முகத்துடன் இருப்பது இனியவை //


இரவு பகல் பாராது உழைப்பது,


இனிய வார்த்தைகள் பேசி மகிழ்விப்பது,


இன்னாரை பகை கொள்ளாது இருப்பது,


இன்னல்களை சாதுர்யமாக எதிர் கொள்வதும்,


இடையூறுகளை தகர்த்து விட்டு முன்னேறுவதும்,


இன்று போய் நாளை என்று இல்லாதிருப்பதும்,


இன்றும் என்றும் நல்லதை நினைப்பதும்,


இக்கட்டான சூழ்நிலைகளை அறிவால் வெல்வதும்,


இதுவல்லவோ இனிய செயல்கள் அல்லவா?


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

போட்டி

பொறுமையும் பொறாமையும்