Posts

Showing posts from May, 2022

கலைமகள் கைப் பொருளே

 கலைமகள் கைப் பொருளே கலைமகளே கல்விச் செல்வம் தருபவளே// கண்ணில் பட்டதை ஆராய வைப்பவளே// கல்வியைக் கொடுத்ததால் பணம் வந்ததே // கலகத்தைத் தவிர்க்க வைக்கும் கலைமகளே// கலைகள் அனைத்தையும் அள்ளி வீசுபவளே// கற்றதை  மற்றவர்களுக்கு உதவ கொடுக்க உதவுபவளே// கல்வி அறிவால் ஒழுக்கம் தருபவளே// கற்பனையைக் கொடுத்து எழுத்தாளர் ஆக்கியவளே// கலைமகள் கைப் பொருளே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மாற்றங்கள்

 🌷மாற்றங்கள் என்பது, 🌷மனதளவில் இல்லை // 🌷மாறுபட்ட நல் செயல்களை 🌷மன்றாடி செயல்படுத்துவதே // 🌷மாற்றங்களைப் போராடி, 🌷 மாற்றங்களை விதைத்து, 🌷மகிழ்ச்சிக்கு வித்திட்டு, 🌷மாற்றங்களை ஊன்றுகோலாக்கி, 🌷மகிழ்வோடு வாழ முயற்சிக்க வேண்டும். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

ஒரு மனிதனின் நம்பிக்கை

 ஒரு மனிதனின் நம்பிக்கை நம்பிக்கையை நம் மீது வைப்பது முக்கியம் // நம்பிக்கையை மற்றவர்களின் மீது வைப்பது மிக முக்கியம்// நம்பிக்கையைதொழிலாளிகள் மீது முதலாளி வைப்பது அந்நிறுவனத்தின் தூண் // நம்பிக்கையை முதலாளி மீது தொழிலாளிகள் வைப்பதுஉற்சாக உழைப்பே // நம்பிக்கையை வாகன ஓட்டியின் மீது வைப்பது பாதுகாப்பின் மகிழ்ச்சியே // நம்பிக்கையின் அஸ்திவாரமே சமூக பாதுகாப்பு // நம்பிக்கையை வற்புறுத்தினால் உண்மையாகாது //  நம்பிக்கை இயற்கையாக வரும் போது அது அழகூட்டும்// நம்பிக்கை இயற்கையானால் அதற்கு அழிவு ஏது?  நம்பிக்கைப் பாதையில் பயணிப்பது சச்சரவுகளைத் தீர்க்கும் // நம்பிக்கை மனித மனங்களில் உருவாக்க வேண்டும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

சுகமான சுமைகள்

 சுகமான சுமைகள் பெற்றோர்களைப் பேணிக் காப்பது சுகமான சுமைகள் // ஆதரவற்றோர்களை ஆதரிப்பது சுகமான சுமைகள்// உடன் பிறந்தோர்களை உடனிருந்து பாதுகாப்பது சுகமான சுமைகள்// மனித நேயத்தோடு மற்றவர்களைப் காப்பாற்றுவது சுகமான சுமைகள் // கண் பார்வையற்றோர்களை கண்ணாக இருந்து பாதுகாப்பது சுகமான சுமைகள் // உழைப்பாளிகளுக்கு உடனிருந்து உதவுவது சுகமான சுமைகள் // உடல் ஊனமுற்றோர்களை தூணாக இருந்து பாதுகாப்பது சுகமான சுமைகள் // மற்றவர்கருக்குத் துன்பம் கொடுப்போர்களை அமைதியாக இருந்து பார்ப்பது சுகமான சுமைகள் // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

காணாமல் போகும் ஓய்வும் உறக்கமும்

 காணாமல் போகும் ஓய்வும் உறக்கமும் உறக்கம் மனிதனின் மூளையின் செயல்பாட்டை செயல் பட வைக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்து செயல்களை சுறுசுறுப்பாகயும் , இனிய முகத்துடனமும், வெறுப்பை விரட்டியடித்து எளிதாக செய்து முடிக்க உதவும். உறக்கம் காணாமல் போவதற்குக் காரணம் ஓய்பின்றி ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டிருப்பது தான் காரணம். ஓயாது பணி என்பது நமக்கு கட்டாயம் இல்லை. நாம் தேர்ந்தெடுத்து, நம் நேரத்தை, நம் மூளையை  வீணாக்கி நம் மனதை போராட வைத்து, மன உளைச்சலால் நிம்மதி கெட்டுப் போவதும் உறக்கம் காணாமல் போவதற்கு ஒரு காரணம் ஆகும். ஓய்வு என்பது நம் கையில் நேரம் என்பது நம் கையில் இரண்டும் நம் கையில் இருக்கும் பொழுது, உறக்கத்தை அதற்கு என்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதற்கு ஒதுக்கி விட்டு, மன நிம்மதியைப் பெற்று, நோயின்றி வாழ முற்பட பழகிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்யும் பொழுது எப்படி ஓய்வும் உறக்கமும் காணாமல் போகும்? ஓய்வு கிடைக்க நவீன காலத்தில் தாராளமாக வசதிகள் உண்டு. நவீன தொழில் நுட்பங்கள் நம்மை கட்டாயம் கண் விழித்து என்னைப் பயன்படுத்து என்று சொல்கின்றதா? (அலைபேசி, தொலைக்காட்சி, )எதுவாகட்டும் _ நம் ...