காணாமல் போகும் ஓய்வும் உறக்கமும்

 காணாமல் போகும் ஓய்வும் உறக்கமும்


உறக்கம் மனிதனின் மூளையின் செயல்பாட்டை செயல் பட வைக்கும்.

உடலை சுறுசுறுப்பாக வைத்து செயல்களை சுறுசுறுப்பாகயும் , இனிய முகத்துடனமும், வெறுப்பை விரட்டியடித்து எளிதாக செய்து முடிக்க உதவும்.


உறக்கம் காணாமல் போவதற்குக் காரணம் ஓய்பின்றி ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டிருப்பது தான் காரணம்.


ஓயாது பணி என்பது நமக்கு கட்டாயம் இல்லை. நாம் தேர்ந்தெடுத்து, நம் நேரத்தை, நம் மூளையை  வீணாக்கி நம் மனதை போராட வைத்து, மன உளைச்சலால் நிம்மதி கெட்டுப் போவதும் உறக்கம் காணாமல் போவதற்கு ஒரு காரணம் ஆகும்.


ஓய்வு என்பது நம் கையில்

நேரம் என்பது நம் கையில்

இரண்டும் நம் கையில் இருக்கும் பொழுது, உறக்கத்தை அதற்கு என்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதற்கு ஒதுக்கி விட்டு, மன நிம்மதியைப் பெற்று, நோயின்றி வாழ முற்பட பழகிக் கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்யும் பொழுது எப்படி ஓய்வும் உறக்கமும் காணாமல் போகும்?


ஓய்வு கிடைக்க நவீன காலத்தில் தாராளமாக வசதிகள் உண்டு.

நவீன தொழில் நுட்பங்கள் நம்மை கட்டாயம் கண் விழித்து என்னைப் பயன்படுத்து என்று சொல்கின்றதா? (அலைபேசி, தொலைக்காட்சி, )எதுவாகட்டும் _

நம் தேவைக்குப் பயன்படுத்தி விட்டு, ஓய்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஓய்வு எடுத்துக் கொள்ளும் பொழுது உறக்கமும் எடுத்துக் கொள்ளலாம். இப்படி இருக்கும் பொழுது ஓய்வும் உறக்கமும் காணாமல் போகுமா?


முதலில் போட்டி பொறாமையின்றி வாழ்ந்தால், ஓய்வும் உறக்கமும் நம் கையில் இருக்கும். காணாமல் போகுமா?


பணம் தேவைதான்

ஆனால், பணத்தையே முக்கிய குறிக்கோளாக வைத்து வாழ்வை ஓட்டக் கூடாது. ஓய்வும் உறக்கமும் காணாமல் போகுமா?


ஒழுக்கம் இருந்தால் முன்னேற்றம் பாதைகள் நமக்கு கிட்டும்.

ஓய்வும் உறக்கமும் காணாமல் போகுமா?


மனிதனுக்கு அறிவு ஆக்கத்திற்கு மட்டுமே. அழிவுக்கு இல்லை. இப்படி வாழ்ந்தால் ஓய்வும் உறக்கமும் காணாமல் போகுமா?


ஓய்வும் உறக்கமும் மனிதனுக்கு மிக மிக அவசியம்.

அவற்றை நாம் பயன்படுத்தி வாழ்வில் மகிழ்வு பொங்க வாழ்வோம்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்