சித்த மருத்துவமும் அதன் பயன்களும் தமிழர்களின் மருத்துவ அடையாளமே சித்த மருத்துவம். சித்தர்கள் ஆராய்ச்சி செய்து மருத்துவத்தைக் கண்டுபிடித்து, மக்களுக்கு நோய்களை நிவர்த்தி செய்து வருவதில் மகிழ்ச்சியடைய வைத்தனர். பதினெட்டு சித்தர்கள்தான் மருத்துவத்தை மூலிகைகள் மூலம் கண்டுபிடித்தனர். அனைத்து நோய்களையும், உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து நோய்களுக்கும் மூலிகை மூலமாக மருந்துகளைக் கொடுத்து நோயாளிகளைக் குணப்படுத்தினர். தமிழர்களின் அடையாளச் சின்னமே சித்த மருத்துவம் தான். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஐந்து பஞ்ச பூதங்கள் அறிந்து அதன்படி வைத்தியம் செய்வது தான் சித்த மருத்துவம். நீண்ட நாட்கள் உட்கொண்டாலும் நோய் தீர்வு நிச்சயம் என்பதே சித்த மருத்துவம். சித்த மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை கொடுக்கலாம். மூலிகை என்பதை அனைவரும் அறிந்து எடுக்க முடியாது. சித்த மருத்துவர் மட்டுமே அறிந்த ஒன்றாகும். அகத்தியர் சித்தர் தன் ஏடுகளில் மருத்துக் குறிப்புகள் அனைத்தும் பதிய வைத்துள்ளார். அதன் மூலம் வழி வழியாக மருத்துவம் அறிந்து இன்று வரை மக்களுக்குப் பயனுள்ளதாக இர...