நினைக்காத நாளில்லையே
நினைக்காத நாளில்லையே
முதலில் எழுத்துக் கூட்டிப் படித்தேனல்லவா?
முதன் முதலாக கையெழுத்துப் போட்டேனல்லவா?
எழுத்துப் போட்டியில் பரிசு வென்றேனல்லவர?
பள்ளியில் விளையாட்டில் பங்கேற்றனல்லவா?
கல்லூரியில் நண்பர்கள் வட்டம் போட்டோ மல்லவா?
மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சியடைந்தேனல்லவா?
கண் தானம் பதிவு செய்தேனல்லவா?
உணவு சமைத்ததில் பாராட்டுப் பெற்றேனல்லவா?
மழைத் தண்ணீரில் கப்பல் விட்டேனல்லவா?
எழுத்துத் துறையில் காலடி வைத்தேனல்லவா?
எழுத்துலகில் தடம் பதித்தேனல்லவா?
மனதில் நீங்காத அனைத்தும்நினைக்காத நாளில்லையே //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment