சுயநலமிழந்த மனிதர்கள்
சுயநலமிழந்த மனிதர்கள்
சுயநலமில்லாத மனிதர்கள் சுயமாக சிந்திக்காது,
சுறுசுறுப்பாக இருப்பது போல நடந்து கொண்டு,
சுற்றித்திரிந்து களைப்பு மிகுதியால் சோர்ந்து,
சுருட்டிக கொண்ட துணி பையை வைத்துக் கொண்டு,
சுறுசுறுப்பின்றி சும்மா வருந்திக்கொண்டு,
சுகவீனம் தாக்கி விட்டாலும் பெரிது படுத்தாது,
சுகவாழ்வு பற்றி அறியாது சிரித்துவிட்டு,
சுறுசுறுப்பாவது மாதிரி நமக்கு தெரிந்தாலும்,
சுயநலமிழந்து வார்த்தைகளை உதிர்த்து விட்டு,
சுற்றியிருப்பவர்கள் சிரிக்கவும், தானும் சிரிப்பார்கள்.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment