நமக்கான நாள் வரும்

 நமக்கான நாள் வரும்


நம் எண்ண அலைகள் ஓயாது//

நல்லது கெட்டது அனைத்தும் ஓடும்//

நம் பார்வையில் பட்டது ஓடும் //

நம் கற்பனையின் மிகுதியால் ஓடும்//

நான் எதிர்பார்த்த சிறந்த எழுத்தாளர் நாள் வரும் //

நம் நாடு கொலை, கொள்ளை இல்லாது,

நல்லவர்கள் முகத்திரை அறிந்து,

நம் நாடு கற்பழிப்பு இல்லாத நாடாகி,

நம் நாட்டு மக்கள் சுதந்திரத்தை,

நம் சுதந்திரம் என்று கையிலெடுத்து வாழாது,,

நாம் பெற்ற சுதந்திரத்தை காத்து,

நம் மகிழ்ச்சியை நாமே அழித்து விடாது,

நன்மையில் ஒன்றுபட்டு சேர்ந்து பாடுபட்டு,

நம் நாடு பலம் பெற்று,

நம் குடும்பமும் பலம் பெற்று,

நல் சமூகம் என்றாகி,

நல் வினைகளை வித்திட்டு வளர்த்து,

நமக்கான நாள் வந்துவிட்டது,

நாம் கவலையை வேரோடு பிடுங்கிவிட்டு,

நலமுடன் மகிழ்வு பெற்று வாழ்வோம்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்