அப்பா
.அப்பா
அன்பு
அரவணைப்பு
அனைத்தும்
அறிய உதவுதல்
அன்பான பாப்பா
அப்பாவின் பாப்பா
அகிலம் சிறக்க முன்னேற வேண்டும்
அது தானே புகழ்
அப்படின்னு
அடிக்கடி
அன்பாக
அமைதியாக உதாரணம் காட்டி வழிநடத்தும்,
அப்பாவின் சிறப்பு
அளவிட முடியாது
அப்பா குடும்பத்துக்காக உழைத்து உழைத்து சிரமத்தை சிகரத்தைப் போல் தொட்டவர் //
அப்பா குழந்தைகளின் குழந்தைகளிடம் கூட பாசம் மிகுந்தவர்
அப்பா இன்றி
அனைத்தும் இல்லை//
அதனால் அப்பாவுக்கு வயதான காலத்தில் நாம் பாசம் காட்டி பணிவிடை செய்வோம்.
அதுதானே நமது பிறப்பின் பலன்
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment