விளையாட்டு
விளையாட்டு
விளையாடு உடல் நலம் நலமாகும் என்று சொல்லவே//
விளையாடு விளையாடு என்ற சொல் பதியவே //
விளையாட்டை ஆரம்பிக்கவே//
வினையானது விளையாட்டே //
விரும்பி வீசிய பந்து
விலகிப் போய் சிறுமியின் தலையில படவே //
விம்மி விம்மி சிறுமி அழுகவே //
விழுந்து விழுந்து நான் அழவே //
விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள் என்று சொல்லவே //
விட்டு விடுங்கள் இருவரும் ஆபத்து ஒன்றுமில்லை என்று சொல்லவே //
விட்டபாடில்லை இருவருமே //
விளையாட்டு விபரீதம் ஆயிடுச்சு என்று சிலர் சொல்லவே //
விளையாடு என்ற சொல் என் மனதை வாட்டிய தே//
விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன் அன்றே//
விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்வோமே //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment