பறவைகள்

 பறவைகள்


பறவைகளிடம் ஒற்றுமையைக் காண்போம்//


பறவைகளிடம் பகிர்ந்து உண்பதைக் காண்போம்//


பறவைகள் மரங்களை பூச்சி அரிக்காததைக் காண்போம்//


பறவைகள் மன்னர்கள் காலத்தில் தூது போவதைக் கண்டோம்//


பறவைகளை காதல் காவியத்தில் கண்டோம்//


பறவைகளை மனித மிருகங்கள் வேட்டையாடுவதை காண்கின்றோம்//


பறவைகளைக் கண்டவுடன் மகிழ்வுடன் நேரத்தை கடக்கின்றோம்//


பறவைகளின் எச்சில் மூலம் விதை பூமியில் விதைப்பதைப் பார்க்கின்றோம்//


பறவைகள் கூட்டமாகப் பறந்து தொலைதூரம் செல்வதைப் பார்க்கின்றோம்//


பறவைகளின் அழகு நம் கற்பனைகளை அதிகரிப்பதை நினைத்து மகிழ்கின்றோம்//


பறவைகள் நம்மிடம் பழகுவதை நினைத்து மகிழ்கின்றோம்//


பறவைகளை நாம் கூண்டில் அடைக்காது சுதந்திரமாகப் பறக்க விட்டுப் பார்ப்போம்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்