வலி தந்த நினைவுகள்
வலி தந்த நினைவுகள்
வயதான பெண்மணியிடம் கேட்ட மன வேதனைகள்//
சாலை ஓரத்தில் அனாதை பிச்சைக்காரன் சடலத்தைக் கண்ட மன வேதனை//
குடிகாரக் கணவனிடம் சிக்கித் தவித்த பெண்மணியைக் கண்டதால் மன வேதனை//
அநீதிக்கு நீதி தந்ததைக் கேட்டு மனவேதனை//
பெற்றோர்களை ஒதுக்கிய குழந்தைகளைப் பார்த்த மன வேதனை//
வழிப்பறியை, கண்டும் காணாதது போவோரைப் பற்றிய மன வேதனை//
சொத்து இருந்தால் சொந்தம் என்பதை நினைத்து மனவேதனை//
பணம் இருந்தால், பகைவனும் நண்பனாவான் என்பது நினைந்து மனவேதனை//
உறவுக்கு மதிப்பு குறைவது பற்றிய மனவேதனை//
பணம் பாதாளம் வரைக்கும் பாயும் உண்மை கண்ட மன வேதனை//
சுதந்திரம் கிடைத்தும் கிடைக்காதது கண்டு மனவேதனை//
இயற்கை வளங்களை அழிப்பது கண்டு மன வேதனை//
மற்றவர்களின் ஆனந்தத்தை ஒழிக்க நினைப்பது கண்டு மனவேதனை//
எதிலும் எங்கும் அடக்கு முறை ஒழியாதது கண்டு மனவேதனை//
துணிந்தால்
துன்பத்தை ஓட்டலாம்
துணியாது கலங்கி நிற்பது கண்டு மன வேதனை//
மன வேதனைகளை
மங்காது காப்பது வேதனையிலும், வேதனைதானே?|......
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment