கலைந்து போன கனவுகள்

 கலைந்து போன கனவுகள்


இளம் வயதில் சிரித்து விளையாடியது,


இறை வழிபாடு தாத்தா சொல்லியது,


இனியவை பேசப் பாட்டி சொல்லியது,


இன்னல்களை எதிர்க்க ஆசிரியை சொல்லியது,


இன்பம் துன்பம் இரவு பகல்,


இப்படிப் பெரியம்மா தைரியம் சொல்லியது,


இலகுவாக எதையும் சமாளிக்கப் பெற்றோர்கள்


இன்றும் சொல்லி வரும் தன்னம்பிக்கை,


இப்படி கடந்து போன வாழ்வானது,


கலைந்து போன கனவுகளாகப் போனது.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்