விதியை மதியால் வெல்லு

 விதியை மதியால் வெல்லு


சோதிடம் பார்த்து விதியை நினைத்து,


சோம்பல் கொண்டு காலம் ஓட்டாதே //


எண்ணங்களை நல் விதத்தில் ஓடவிட்டு,


எண்ணங்களை நிறைவேற்ற முயற்சி எடு //


அடுத்தவர் மேல் பழி போட்டு தப்பித்து,


அழிவில் சிக்கிக் கொண்டு திணறாதே //


எடுக்கும் செயல்களை துரிதமாக செய்து,


எல்லாம் நன்மைக்கே என்று செயல்படு //


சாஸ்திரம் பார்த்து அனைத்தும் தள்ளிப்போட்டு,


சாவது மேல் என்று நினைக்காதே/


மதியால் அனைவரும் சிந்தித்து செயல்பட்டு,


மதியால் விதியை உதறிவிட்டு வாழ்வோம்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்