தோள் கொடுப்பான் தோழன்
தோள் கொடுப்பான் தோழன்
தோழன் நமக்கத் தகப்பனே //
தோழன் நமக்குத் தாயுமே//
தோழன் நமக்கு ஓர் அறிவுரையாளரே //
தோழன் நமக்கு நட்பு மட்டுமல்ல உயிருமே//
தோழன் இருந்தால் நமக்கு ஓர் நம்பிக்கையூட்டியே //
தோழன் தடுக்கி விழாமல் பார்ப்பவனே //
தோழன் இருந்தால் சிக்கல் பனி போலாகும்//
தோழன் நம்முடன் இருக்கும் தெய்வமே //
தோள் கொடுக்கத் தோழன் இருந்தால் தோல்வியும் வெற்றியே//
தோள் கொடுக்கத் தோழன் இருந்தால்
ஆறுதலுக்கு அளவேயில்லை//
தோழன் கண் இமை போன்றவரே//
தோழன் உடன் பிறந்தவன் போன்றவரே//
தோல்வியைக் கண்டு துவண்டு போகாது காப்பவன் தோழனே //
தோழன் உடனிருந்தால் வெற்றிக்கு நடைபாதையே /
தோழன் சாதனைப் படைக்க துணையிருப்பவனே //
தோழன் முயற்சி செய்ய ஊட்டச்சத்துப் போன்றவனே //
தோழன் வெற்றி வாகைச் சூட வலது கை போன்றவனே //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment