அப்துல் கலாம்
விமானம் ஓட்டி ஆக கனவு கண்டு,
முயற்சி செய் முடியும் வரை முயற்சி செய்//
விஞ்ஞானியாகி விண்வெளியில் தடம் பதித்து,
கற்பிப்பதில் ஆர்வத்தினால் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகி
இந்திய ஜனாதிபதியாகி
இந்திய மக்களின் நாயகனார்.
எழுத்து மூலம் உயிர் கொடுத்த அக்னி சிறகுகள்,
என்றும் உலா வந்து கொண்டிருக்கும்.
கனவு காணுங்கள்
கனவை விழிப்புடன் காண் என்றார்.
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களே
இமைப்பொழுதும் வீணாக்காதே என்றார்.
இந்தியாவின் முன்னோடி
இளைஞர்களின் முன்னோடி
இருந்த போதிலும்
இறந்த போதிலும்
இறவாத மாமனிதன்
அப்துல்கலாம் ஐயா
அனைவரது உள்ளத்திலும் பதிந்துவிட்டார்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment