இசையே அருமருந்து
இசையே அருமருந்து
இசையால் முத்தமிழ் உயர்ந்து நிற்கும் //
இன்ப மகிழ்ச்சிக்கு இசையே உரம் //
இறைவனை நாயன்மார், ஆழ்வார் பாடி துதித்தனர்//
இரவில் தூங்க இசை மருந்து //
இரவு பகல் உழைக்க இசை மருந்து //
இவ்வளவுதானா வாழ்க்கை மாற இசை//
இக்கட்டு காலத்தில் இசை மன நிம்மதி //
இன்பமான சூழலில் மூளை செயல்பட இசை//
இறந்தாலும் வார்த்தைகளை இசையாக வைப்பர் //
இன்றுவரை பிறந்தாலும் மகிழ்வு இசையே //
இசையே அகிலமும் சிறப்பு பெற அருமருந்து.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment