தமிழ் புத்தாண்டே வருக வருக

 தமிழ் புத்தாண்டே வருக வருக

தமிழர்களின் புத்தாண்டு தை திங்கள் //

இயற்கை விவசாயமே வருக வருக //

புத்தாடை உடுத்தி குடும்பத்தார் மகிழ்வோடு,

உறவினர்களோடு சேர்ந்து பண்பாடு மாறாது

புதுப் பானையில் மஞ்சள் கொத்து கரும்பு கட்டி,

புது நெல் மணியில் பொங்கலிட்டு,

பொங்கலோ பொங்கல் என சப்தமிட்டு, 

ஆரவாரத்தோடு மகிழ்ச்சி பொங்க,

அகமகிழ்ந்து அனைவரது உள்ளமும் குளிர,

சூரிய நமஸ்காரம் அனைவரும் செய்ய,

விவசாயத்தின் முதல் விளைச்சல் வரவில், 

விவசாயிகளின் மகிழ்வோடு  மாடுகளுக்கும் மகிழ்ச்சி கொடுக்க.

தமிழர்களின் பண்பாடு உயர்ந்து வெளிப்பட

விவசாயிகளின் பொருளாதாரம் ஓங்க,

நாட்டின் பொருளாதாரம் ஓங்க ,

தை திங்கள் தமிழர்களின் திருநாளே நன் நாள்.

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்